Troll Trousers 2.0 : சமூகவிரோதியான இந்த அதி தீவிர பயங்கரவாதியை உரிய
நேரத்தில் வளைத்து கைது செய்து தமிழகத்தைக் காப்பாற்றிய தமிழ்நாடு காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்..
vikatan -க .தனசேகரன்- வீ கே.ரமேஷ் :
சேலம் விமான நிலைய விரிவாக்கம் பணிக்காகவும், சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காகவும் சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அதற்காக பல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களை அடுத்தடுத்து சேலம் காவல்துறையினர் கைது செய்து வருவதால் சேலத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.
சேலத்தில் பியூஸ் மனுஷ் பராமரித்து வரும் குமரகிரி ஏரி, மூக்கனேரியைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், ``சேலத்தில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே விமான நிலைய விரிவாக்கமும், 8 வழிச் சாலையும் போடுகிறார்கள். பசுமையை அழித்து பசுமைச் சாலை போடுகிறார்கள். 8 வழி சாலை வந்தால் 8 பேரை வெட்டுவேன்'' என்று கூறினார். அவரை சேலம் காவல்துறையினர் நேற்று முன்தினம் தீவட்டிப்பட்டியில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்
நேற்று இரவு 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நில அளவை செய்யப்பட்டது. தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு நில அளவை செய்ய அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 11 பேர் கைது செய்து வீராணம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். நில அளவீடு செய்யும்போது காவல்துறை குவிக்கப்பட்டதால் பெரும் பதற்ற நிலை உருவானது. விமான நிலைய விரிவாக்கத்துக்காகவும், 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகவும் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் செய்ய சதித்திட்டம் தீட்டி வருவதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் இரவு ஓமலூர் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் முதல்வர் மாவட்டமான சேலத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

மக்களின் முழு ஆதரவைப்பெற்ற, நம்பகமான, லஞ்சம் வாங்காத ஒரு ஓட்டு வாங்கி முகம் என்று அதிமுகவில் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. ஆட்சியை கலைத்துவிட்டு மறு தேர்தல் வந்தால் கஷ்டம் தான். அதனால் எந்த விபரீத விளையாட்டிற்கு செல்லாமல் லஞ்சம் வாங்காமல் மக்களுக்கு உண்மையாக பலன் தரும் திட்டங்களை செய்தால் தப்பிக்க வழி உண்டு . முடியவில்லை என்றால் உபத்திரவம் தராமலாவது இருக்கலாம். ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மூடிகொண்டு இருந்த மத்தியை இப்போதும் அதே போல் வைக்கக் கூடிய தைரியம் உள்ளவர் யார் ? அவர் கட்சி தலைமையை ஏற்கலாம். மக்களின் பக்கம் மக்களுக்காக துணிந்து நியாயத்தின் பக்கம் நில்லுங்கள். மக்களின் ஆதரவு எப்போதும் போல் கிடைக்கும். இறைவனின் ஆதரவும் கிடைக்கும்.
பதிலளிநீக்கு