வெள்ளி, 29 ஜூன், 2018

ராமசாமி படையாச்சி, சிவாஜி கணேசன் பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

நக்கீரன்: சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சி, நடிகர் சிவாஜி கணேசன்
ஆகியோரது பிறந்த நாட்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்காக  நடிகர் பிரபு அரசுக்கு நன்றி தெரிவித்தார். நடிகர் சிவாஜி கணேசனை தங்கள் குடும்பத்தில் ஒருவராக லட்சக்கணக்கானோர் கருதுகின்றனர் என்று தெரிவித்த பிரபு. நடிகர் சிவாஜி கணேசன் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக