வியாழன், 7 ஜூன், 2018

ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்,, பூனைக்குட்டி வெளியே வந்தது!

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாக்பூரில் பிரணாப் முகர்ஜி - ஹெட்கேவர் நினைவிடத்தில் மரியாதை
மாலைமலர்:  ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இன்று அவர் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் வந்தடைந்தார். மும்பை: ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா இன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானதும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை அவருக்கு கடிதமாக எழுதியிருந்தனர். இந்நிலையில், சர்ச்சைகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் அவர் இன்று நாக்பூர் வந்தடைந்தார்.
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார். பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் உடன் அவர் சிறிது நேரம் பேசினார். இதனை அடுத்து, உபச்சார விழாவில் அவர் பங்கேற்று பேச உள்ளார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக