புதன், 6 ஜூன், 2018

விலை போன தினமலர் மற்றும் சன் டிவி – கோப்ரா போஸ்ட் ஆபரேசன் 136

Chinniah Kasi : இந்தியாவில் ஆரியர்களுடைய நாட்டை உருவாக்க பி.ஜே.பி யின்
பிராமின்ன இந்துத்துவா கொள்கையை பரப்ப, இந்திய மீடியாக்கள் பணம் பெற சம்மதித்த வீடியோவின் முதல் பாகங்களை கோப்ரா போஸ்ட் என்கிற புலனாய்வு பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று இரண்டாம் பாகத்தை வெளியிட்டது. இதில் தமிழ் மீடியாக்களும் சிக்கி இருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்ரா போஸ்ட் பத்திரிக்கையின் செய்தியாளர் புச்ப் ஷர்மா, ஆச்சாரியா அடல் என்கிற பெயருடன் தன்னை ஒரு நாக்பூர் பிராமின்ன ஆர்.எஸ்.எஸ் காரரை போல காட்டிக்கொண்டு, இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் உரிமையாளர் மற்றும் மேனேஜர்களை சந்தித்து, பா.ஜ.க வின் பிராமின்ன இந்துத்துவ கொள்கையை விளம்பரப்படுத்தவும், 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிம்பப்படுத்தவும் செய்தால் பணம் தருவதாக கூறி அதை ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதில் இந்தியா முழுவதும் உள்ள 27 சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஒத்துழைக்காதது இரு மீடியாக்கள் மட்டுமே. ஒன்று மேற்கு வங்கத்தை சேர்ந்த பர்தமன் தினசரியும், திரிபுராவை சேர்ந்த தைனிக் சாம்பத்தும் தான்.
இது தொடர்பாக கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருதா பாகல் கூறுகையில், இந்த ஆப்ரேசன் 136 யை மேற்கொண்ட எங்கள் பத்திரிக்கையாளரே அதிர்ச்சியடையும் அளவிற்கு மீடியாக்களின் பிரதிநிதிகள் பேசியுள்ளதாக தெரிவித்தார். இந்த மீடியாக்களின் பிரதிநிதிகள் நாங்கள் சொன்னதை ஏற்றுகொண்டதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பிராமின்ன இந்துத்துவ கொள்கையை எந்தளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆலோசனையும் கூறியுள்ளனர் என்றார் அனிருதா பாகல்.
தினமலர்:
கோப்ரா போஸ்ட் பத்திரிக்கையாளர் புஷ்ப் ஷர்மா, ஆச்சரியா அடல் என்ற பெயரில் தினமலரின் மார்டின் அவர்களை சந்திக்கிறார்.
நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் இந்துக் கடவுளான கிருஷ்ணாவை பற்றியும், பகவத் கீதை பற்றியும் வெளியிட்டு, அதன் மூலம் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியை பிம்பப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு பணம் தருவதாகவும் கூறுகிறார். உடனே மார்டின், தினமலரின் பிசினஸ் மற்றும் டெக்னிகல் டைரக்டர் எல்.ஆதிமூலம் அவர்களிடம் அழைத்துச் செல்கிறார்.
உங்கள் விசயமாக மார்டின் சொன்னார் என்றும், நாங்கள் பா.ஜ.க வின் சித்தாந்ததோடு பயணிப்பவர்கள் தான். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா மீது நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள் என்று கூறுகிறார் ஆதிமூலம்.
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே, பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவின் மீடியாக்களை அழைத்து பேசினார். அதில் நாங்களும் ஒருவர். டெல்லியிலும், கோயம்புத்தூரிலும் மோடியை சந்தித்தோம். 1 மணி நேரத்தில் 45 நிமிடம் எங்களுக்கு மட்டுமே ஒதுக்கினார் மோடி என்கிறார். எனது தந்தையும் நிதின் கட்கரியும் நெருங்கிய நண்பர்கள். அவர் தமிழ்நாடு வந்தால் என் தந்தையுடன் இரவு உணவு அருந்திவிட்டே செல்வார் என்றும் கூறுகிறார்.
நாங்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். உதாரணமாக மோடி ஜி படம் மீது கேமராவை வைத்தால் மோடி ஜியின் குரல் கேட்கும். எங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிறந்த பங்களிப்பை தருகிறோம் என்கிறார். உடனே கோப்ரா போஸ்ட் பத்திரிக்கையாளர் மார்டினிடம் பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கை அனுப்புமாறு கேட்டவாறு முடிகிறது அந்த வீடியோ பதிப்பு.
சன் டிவி:
சன் டிவியின் நெட்வொர்க் சேல்ஸ் ஹெட் ஜார்ஜ் அலெக்சை சந்திக்கிறார் புஷ்ப் ஷர்மா. அதில் கடந்த 25 வருடமாக நாங்கள் ராமர் மற்றும் அயோத்தியை வைத்து அரசியல் செய்தோம். இனி வரும் 10 வருடங்களுக்கு, கிருஷ்ணா மற்றும் பகவத் கீதையை வைத்து அரசியல் செய்யவுள்ளோம். அதன் மூலம் 2019 தேர்தலில் வெற்றி பெற உத்தி வகுத்துள்ளோம். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்கிறார் புஷ்ப் ஷர்மா
சன் டிவியில் இருக்கிற பல்வேறு மொழி சேனல்கள் பற்றியும், அதில் எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் விளக்கமளிக்கிறார் ஜார்ஜ். இறுதியில் 20 கோடிக்கு பேரம் பேசி முடிக்கப்படுகிறது. சன் டிவியின் குழந்தைகள் சேனலை தவிர அனைத்து சேனல்களிலும் எங்களை விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், பல்வேறு மொழி சேனல்களில் 50% தமிழ் சேனல்களில் முக்கியத்துவம் கொடுக்குமாறும் சொல்கிறார். பின்பு தினகரன் தலைமை மேனேஜர் ராஜேஷ் கண்ணனை சந்திக்கிறார் கோப்ரா போஸ்ட் பத்திரிக்கையாளர்.
தனிப்பட்ட முறையில் நான் மோடி ஆதரவாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திகொள்ளும் ராஜேஷ், demonetization மற்றும் ஜி.எஸ்.டி என்றோ கொண்டு வந்திருக்க வேண்டிய திட்டம். இறுதியில் மோடி தான் அதை கொண்டு வந்தார். மோடி தான் அடுத்த முறையும் பிரதமர். 2025 வரை அவர் தான் இருப்பார், அவர் நோக்கம் தெளிவாக உள்ளது. எங்களால் முடித்த அளவிற்கான பங்களிப்பை தருகிறோம் என்று கூறுகிறார் ராஜேஷ். இறுதியில் தினகரன் பத்திரிக்கைக்கு மட்டும் 5 கோடி பேரம் பேசி முடிக்கப்படுகிறது.
இது தவிர நியூஸ் 18 சேனலின் துணைத் தலைவர்களான பிரியங்கா துத்தா, ஜாய் சக்கரபோர்த்தி இருவரும் பேசிய வீடியோவும் வந்துள்ளது. அதில் எங்களிடம் உள்ள 44 சேனல்கள் (நியூஸ் 18 தமிழ்நாடு உட்பட) அனைத்தையும் பயன்படுத்துகிறோம். இது நமக்குள் இருக்கட்டும். வேறு நபர்களுக்கு தெரிய வேண்டாம் என்கிறார் ரகசிய புலனாய்வு வீடியோவில்.
இது தவிர டைம்ஸ் நவ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு 500 கோடி மற்றும், இந்தியா டுடே விற்கு 275 கோடியும் பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
Cobra post புலனாய்வில் சிக்கிய மீடியாக்கள்:
* Times of India
* India Todaygroups,
* PayTM,
* Hindustan Times, * Dainik Bhaskar, *Zee News,
* Star India, *ABP,
* Dainik Jagran, *Radio One,
* Suvarna News, *Red FM,
*Lokmat,
*ABN,
*Andhra Jyothy, *TV5,
*Dinamalar,
* sun group,
* news 18,
*Big FM,
*Prabhat Khabar,
*K News,
* India Voice, *the New Indian Express,
*MVTV * OPEN magazine.
விலை போன தினமலர் மற்றும் சன் டிவி – கோப்ரா போஸ்ட் ஆபரேசன் 136 - http://goodnewstamil.com/paid-media-tamil-exposed/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக