வியாழன், 3 மே, 2018

பாஜகவுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் .ஜிக்னேஷ் மேவானி பிரசாரம் .. கர்நாடக satt

தீக்கதிர் :  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், குஜராத் சுயேட்சை எம்எல்ஏ
ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ்ஆகியோர், பாஜக-வுக்கு எதிராக பிரச்சாரம்செய்து வருகின்றனர். பாஜக-வின் மதவெறி அரசியலை, மக்களுக்குப் புரியும் விதமாக, இவர்கள் எடுத்துரைப்பதால், இந்த இருவரின் பிரச்சாரத்திற்கும் மக்கள் மிகுந்த மதிப்பளிக்கின்றனர். நல்ல கூட்டமும் கூடுகிறது. அண்மையில் ஓரிடத்தில் பேசுகையில், “அதானி, அம்பானியிடம் இருந்து 80 சதவிகிதம் கமிஷன் வாங்கும் பிரதமர்மோடி, கமிஷன்- ஊழல் பற்றி பேசலாமா?என்று ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பிஇருந்தார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்குவேலை தருவதாக கூறி மோடி ஏமாற்றியது உட்பட பல்வேறு மோசடி வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், தென்னிந்தியாவுக்குள் பாஜக நுழைவதைத் தடுக்கும் வாய்ப்பு கர்நாடக மக்களிடம்தான் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சனையை தீர்க்க பாஜக-வைச் தேர்ந்தெடுத்தால் அவர்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜூம் சாடினார்.ஆரம்பம் முதலே, ஜிக்னேஷ் மேவானி,பிரகாஷ் ராஜைக் கண்டு அஞ்சி, அவர் களின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க கோரிய பாஜக, தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் பதற்றம் அடைந்துள்ளனர்.இதையடுத்து, ஜிக்னேஷ் மேவானியும், பிரகாஷ் ராஜூம் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசுவதாக புகார் அளித்துள்ளனர். “பிரதமர் மோடியை கார்ப்பரேட் சேல்ஸ் மேன் என்றும், நாட்டைகொள்ளையடிக்கும் திருடன் என்றும்அழைக்கிறார்கள்; எனவே கர்நாடகத்தேர்தல் முடியும் வரை எந்தக் கூட்டத்திலும் நிகழ்ச்சிகளிலும் இவர்களை பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறியுள்ளனர்.
தீக்கதிர் 2/5/2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக