வெள்ளி, 4 மே, 2018

கர்நாடகா தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் l இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானவர்

Karnataka election: Polls at Jayanagar constituency likely to be postponed
மாலைமலர் :பெங்களூர்: கர்நாடக மாநிலம்
ஜெயநகர் தொகுதிக்கான வாக்கெடுப்பு மட்டும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயநகரில் பாஜக அறிவித்து இருந்த வேட்பாளர் மரணம் அடைந்து உள்ளதால், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஜெயநகரில் இருந்து பாஜக கட்சிக்காக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானவர் விஜயகுமார். தற்போது அந்த பகுதியின் எம்எல்ஏவாக அவர் இருக்கிறார். இந்த நிலையில் அதே தொகுதியில் தேர்தலில் 3வது முறையாக பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் நேற்று ஜெயநகரில் 4வது பிளாக்கில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணிக்கு மரணம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த தொகுதியில் பாஜக கட்சி இனி போட்டியிட முடியாது. வேட்பாளர் பதிவிற்கான காலக்கெடு எப்போதோ முடிவடைந்துவிட்டது. இதனால் பாஜக புதிய வேட்பாளரை அந்த தொகுதிக்கு அறிவிக்க முடியாது. பாஜக எந்த கூட்டணியிலும் இல்லை என்பதால் பிற வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது.

இதனால் தற்போது பாஜக அங்கு இருக்கும் சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்க வாய்ப்புள்ளது. அல்லது தேர்தல் ஆணையத்தில், இந்த தொகுதிக்கான வாக்கெடுப்பை மட்டும் தள்ளி வைக்க கோரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது. அப்படி கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தேர்தல்ஆணையம் இந்த தொகுதிக்கு மட்டும் தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்புள்ளது.
இந்த தொகுதி பெங்களூரில் அதிக தமிழ் மக்கள் வசிக்கும் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக