செவ்வாய், 22 மே, 2018

போராட்ட ஒருங்கிணப்பாளர்களை குறி வைத்து சுட்டு தள்ளினர்....ஆயர் ஜெயசீலன் சற்றுமுன் மரணமடைந்தார்!!

புரட்சிகர முன்னணி இயக்க தோழர்கள் தமிழரசன், சண்முகம், வினிதா, தங்கையா, கிளாட்சன், ஜெயராமன் என்று 6 பேர் அதிமுக அரசின் ஆணைப்படி போலீசால் படுகொலை. ஒரே இயக்கத்தை சேர்ந்த ஆறு பேரை திட்டமிட்டு கொன்றதை பற்றி எந்த ஊடகமும் வாய் திறவாது !!
போராட்டத்தை ஒருங்கிணைத் தவர்களைத்... தேடித்தேடிக் கண்டு பிடித்து திட்டமிட்டுக் கொன்றுள்ளனர்
1) புதிய தலைமுறையில் காட்டப்படுவது Self Loading Rifle அல்லது INSAS Rifle போல் தெரிகிறது. கூட்டத்தைக் கலைக்க, நிலைமையைக் கட்டுக்குள் கொணர இந்த வகைத் துப்பாக்கிகளைத் தான் பயன்படுத்துவார்களா? Tear Gas, Riot Gun, Air Gun தானே கலவரங்களில் பயன்படுத்துவார்கள்?
2) இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் என்கிறார்கள். கலவரத்தை அடக்க நிகழ்த்தப்பட்ட ஒரு random துப்பாக்கிச்சூட்டில் எப்படிக் குறிப்பாய் போராட்டத்தின் முக்கியஸ்தர்கள் இறந்தார்கள்?
3) இறந்தவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சில் அல்லது தலையில் குண்டடி பட்டு இறந்திருக்கிறார்கள். இறப்பை உத்தேசித்த சுடுதலில் தான் இந்தத் துல்லியம் சாத்தியம். ஒன்றிரண்டு எனில் விபத்தாய்க் குறி பிசகி விட்டது எனலாம். இது மரணத்தைக் குறி வைத்தது போல் தானே இருக்கிறது?
4) சுட்டவர்கள் யார்? வழக்கமான காவல் துறையினரா அல்லது துப்பாக்கிச்சூட்டில் தேர்ந்தவர்களா? (பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளையும், குறியின் துல்லியத்தையும் நோக்குங்கால் அவர்கள் வழக்கமான போலீஸாராகத் தோன்றவில்லை.) இரண்டாவது எனில் அவர்கள் ஏன் வரவழைக்கப்பட்டார்கள்? எனில் தேர்ந்தெடுத்த போராட்டக்காரர்களைப் போட்டுத் தள்ளுவது தான் நோக்கமா?

5) மருத்துவமனையில், மீனவர் வீடுகளில் போலீஸ் தாக்குதல் நடந்தது என்கிறார்கள். இது எதற்கு? நிச்சயம் கலவரத்தை அடக்க அல்ல. ஒன்று பழி தீர்க்க. அல்லது இனிமேல் போராட்டம் கூடாது என்ற பயத்தை ஏற்படுத்த.
6) ஊடகங்கள் வீடியோ எடுக்க அனுமதிக்கப் பட்டதும் கூட இனி போராட்டம் செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகப் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் தானா? குறிப்பாய் புதிய தலைமுறை வீடியோ ஒரு மிருக வேட்டை போல் இருக்கிறது. அரசு தன் பிரஜைகளுக்கு இதன் மூலம் பயத்தை விதைக்க முயல்கிறது.
- Saravanakarthikeyan Chinnadurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக