புதன், 16 மே, 2018

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க இன்று இரவே அழைக்கிறார் ஆளுநர்?

Kalai Mathi - Oneindia Tamil பெங்களூரு: பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க இன்று இரவே ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உரிமை கோரிய குமாரசாமி எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி.
போராட்டம் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தினர். அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை முன்பாக பாஜகவை கண்டித்து ஜேடிஎஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அணிவகுப்பு? ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் ஆளுநர் முன்பாக அணிவகுக்க காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்த காங்கிரஸ்- ஜேடிஎஸ் எம்,.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். கர்நாடகாவில் யார் ஆட்சியமைப்பது என்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் பெயர் சரிபார்க்கப்பட்டு பேருந்துகள் மூலம் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். ஏற்கனவே மணிப்பூர், மேகாலயா மற்றும் கோவாவில் பாஜக பின்பற்றிய ஃபார்முலாவை கையிலெடுத்து ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ். இந்நிலையில் கூவத்தூர் ஃபார்முலாவை கையிலெடுத்து எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் பணியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக