புதன், 30 மே, 2018

குட்கா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.

டிஜிபி குட்கா ராஜேந்திரன்
குட்கா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.மாலைமலர் :குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை:
குட்கா அமைச்சர் நத்தம் விசுவநாதன்
 குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன் அடிப்படையில் குட்கா ஊழல் பற்றி விசாரிக்கும் பொறுப்பை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்றனர். அத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்னை வந்து விசாரணையைத் தொடங்கியது.
முதற்கட்டமாக குட்கா ஊழல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கியது.  அதனை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக 17 கீழ்மட்ட அதிகாரிகள் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருந்தது. தற்போது அவர்களின் பெயர்கள் சி.பி.ஐ.யின் முதல்  தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அடுத்தகட்டமாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரிகளின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தருமாறு தமிழக அரசிடம் டெல்லி சி.பி.ஐ. கேட்டிருப்பதால் அந்த ஆவணங்கள் கைமாறியதும் விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக