ஞாயிறு, 27 மே, 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு

Sterlite Massacre Row: Police releases CCTV video of Tuticorin collector office Shyamsundar tamilthehindu:  சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.> பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டது.

20 நிமிட சிசிடிவி காட்சிப் பதிவை வெளியிட்டது தூத்துக்குடி போலீஸ். முகத்தை மூடியபடி சிலர் கார்களுக்கு தீவைக்கும் காட்சி அதில் பதிவாகி உள்ளது. கல்வீசித் தாக்கும் நபர்கள் அந்த வீடியோவில் உள்ளனர்.
அந்த வீடியோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாகனங்கள் தாக்கப்படுகின்றன. சில இடங்களில் காட்சிகள் ஒட்டி வெட்டப்பட்டது போல உள்ளது. துப்பாக்கி சூடு நடந்து 4 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பு துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்துள்ளது. பொதுமக்கள் தரப்பு காட்சிகளை மட்டுமே காவல்துறை வெளியிட்டுள்ளது, மீதம் இருக்கும் காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக