ஞாயிறு, 27 மே, 2018

வைகோ :ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் 10 மாவட்ட மக்களைத் திரட்டி பெரும் போராட்டம்

: Mohan Prabhaharan - Oneindia Tamil: மதுரை : ஸ்டெர்லைட் ஆலை இயங்க இனியும் அரசு தாமதிக்கக்கூடாது. அப்படி ஆலை தொடர்ந்து இயங்கினால், 10 மாவட்ட மக்களைத் திரட்டி மதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தில், காவல்துறையினர் சுட்டதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. Big Protest over Sterlite Gun firing says Vaiko இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் படுகொலைக்கு நிகரானது. அதை தமிழக அரசு திட்டமிட்டு செய்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதித்தால், 10 மாவட்டங்களில் இருந்து மக்களைதி திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக