செவ்வாய், 15 மே, 2018

மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்: காங். மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் பேட்டி

மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்: காங். மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் பேட்டிதினத்தந்தி : மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் கூறியுள்ளார். பெங்களூர், கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.;கர்நாடக சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் குறிப்பாக மத்திய மற்றும் கடலோர கர்நாடக தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதே போல் வட கர்நாடக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ம.ஜ.த கட்சியும் 40 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் கட்சி ம.ஜ.த கட்சியுடன் கூட்டணியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என நான் நம்புகிறேன். மாநிலத்தில் நல்லாட்சி அமைய மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியுடன் கூட்டணி அமைக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக