ஞாயிறு, 13 மே, 2018

நாசூக்காக, வெளியுலகுக்குத் தெரியாமல் பணம் சம்பாதிப்பதில் கிரிஜா கில்லாடி.

savukkuonline.com -பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – பகுதி 2

பாவம் இவள் ஒரு பாப்பாத்தி கட்டுரையின் முதல் பகுதி இணைப்பு. தலைமைச் செயலாளர் பதவி கிரிஜா வைத்தியநாதனுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கிடைத்த்து. அது வரை தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் தில்லாலங்கடி என்றால் அப்படி ஒரு தில்லாலங்கடி. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே, ஒரு ப்ரோக்கராகவும், ஒரு தொழில் அதிபராகவும், ஒரு நிதி முதலீட்டாளராகவும், இருந்த ஒரு சாமர்த்தியசாலி. வருமான வரித் துறை சோதனைகள் அவர் இல்லத்திலும், அலுவலகத்திலும் நடைபெறவும், ஓ.பன்னீர்செல்வம் அவரை கழற்றி விட்டார். அதையடுத்தே, திடீர் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
கிரிஜா வைத்தியநாதன் ஒரு நேர்மையாளர். அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் அக்ரஹார அம்பிகள் கூசாமல் செய்திகளை பரப்புவார்கள். அவர்கள் அவ்வாறு செய்திகளை பரப்புவதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால், தண்ணீரில் நீந்தும் மீன் எப்போது தண்ணீரை அருந்துகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதோ, அதுபோல, நாசூக்காக, வெளியுலகுக்குத் தெரியாமல் பணம் சம்பாதிப்பதில் கிரிஜா கில்லாடி.

அவர் சுகாதாரத் துறையிலிருந்தே தன் வேலையை தொடங்கி விட்டார். அது பற்றியில்லாம் வரக் கூடிய நாட்களில் ஆராய்வோம். இப்போது இந்தக் கட்டுரை எழுதுவதற்கான நோக்கம், சென்னை ஐஐடி நிறுவனத்துக்கு 162 ஏக்கர்களை, கிரிஜா வைத்தியநாதன் உதவியால், தமிழக அரசு வாரி வழங்கியிருப்பதுதான்.
ஐஐடி ஒரு சிறப்பான கல்வி நிறுவனம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஐஐடி செயல்படும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமான நிலம். மொத்தம் 617 ஏக்கர்கள். இது போக, தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் சென்னை ஐஐடி பயன்படுத்திக் கொள்கிறது.
இப்படி சென்னையின் மையப் பகுதியில் இந்த ஐஐடி செயல்பட்டாலும், தமிழகத்துக்கு ஐஐடி செலுத்தும் பங்கு என்ன என்பதை ஆராய்ந்தால், சொற்பமே. ஐஐடியில் படிக்கும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவிகித்ததுக்கும் குறைவே. சரி. இந்திய அரசு, மக்கள் வரிப்பணத்தில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு அளிக்கிறது என்பதை ஒரு புறம் ஏற்றுக் கொண்டாலும், இங்கு பயிலும் பெரும் பகுதி மாணவர்கள், வெளிநாடுகளுக்கே செல்கிறார்கள். இந்த தேஷ பக்தி, தாய் நாட்டுப் பாசமெல்லாம் இவர்களுக்கு கிடையாது.
சரி போய்த் தொலைகிறது. தேசிய நோக்கில் இந்த நிறுவனம் செயல்படட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் தமிழக அரசு இப்போது செய்துள்ள ஒரு காரியம்தான், நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
தமிழக அரசுக்கு சொந்தமான, காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமத்தில் உள்ள 162 ஏக்கர் நிலத்தை சென்னை ஐஐடி, ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க, தமிழக அரசு இலவசமாக அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் பின்புலத்தில் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்தவர், கிரிஜா வைத்தியநாதன்.
2014ம் ஆண்டிலேயே சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் அமைக்க அரசிடம் நிலம் கோருகிறது. அப்போது வருவாய்த் துறையினர் ஐஐடிக்காக நிலத்தை தேடுகின்றனர். அப்போது, சரியான நிலம் கிடைக்காவிட்டால், ஐஐடி வளாகத்துக்குள்ளேயே உள்ள 60 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தை இடித்து விட்டு, ஆராய்ச்சி மையம் கட்டலாம் என்பதே ஐஐடியின் திட்டம். 617 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள ஐஐடியில், ஆராய்ச்சி மையம் கட்ட இடமில்லாமலா போய் விடும் ?
அப்படித்தான் ஐஐடி வளாகத்துக்குள்ளேயே ஆராய்ச்சி மையம் கட்டும் திட்டமும் இருக்கிறது என்று, 2014ல் ஐஐடி இயக்குநராக இருந்த ராமமூர்த்தி பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். இணைப்பு
இத்திட்டம் உருவாகி, தமிழக அரசிடம் நிலம் கேட்டது வரை எந்த காலகட்டத்திலும், ஐஐடியும் இலவசமாக நிலத்தை கேட்கவில்லை. அரசும் நிலத்தை இலவசமாக தருவதாக இல்லை.
ஆனால் திடீரென்று, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகா, தையூர் கிராமத்தில் உள்ள 162 ஏக்கர்களை, ஐஐடி சென்னைக்கு இலவமாக தந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெளியிடுவதற்கு பின்புலத்தில் இருந்து, இந்த கோப்பை கண்ணும் கருத்துமாக பின்தொடர்ந்து, முதலமைச்சரின் ஒப்புதல் பெறும் வரை, கவனித்துக் கொண்டவர், கிரிஜா வைத்தியநாதன்.
இந்த கோப்பு, அரசு நிலம் சம்பந்தப்பட்டது என்பதால், கல்வித் துறை, நிதித் துறை, வருவாய்த் துறை, நிலச் சீர்திருத்தத் துறை ஆகிய பல்வேறு துறைகளுக்கு சென்று வருகிறது. இதில் வருவாய்த் துறையைத் தவிர, பெரும்பான்மையான துறையின் செயலாளர்கள், ஐஐடிக்கு நிலம் வழங்கலாம். ஆனால் எதற்காக இலவசமாக வழங்க வேண்டும் ? சந்தை விலையை பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்கலாம் என்றே குறிப்பு எழுதியுள்ளனர். ஒரு அதிகாரி, நிலத்தை ஐஐடிக்கு வழங்கவே கூடாது. அதை தமிழக நலனுக்காக ஒரு கல்வி நிலையம் அமைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழக அரசே ஒரு உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையத்தை அமைக்கலாம் என்றே கோப்பில் எழுதியுள்ளார்.
ஆனால் இந்த அத்தனை அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி, எடப்பாடி பழனிச்சாமி இந்த நிலத்தை இலவசமாக ஐஐடிக்கு வழங்கும் உத்தரவை பிறப்பித்ததற்கான முழு பின்னணியும் கிரிஜா வைத்தியநாதன்தான். இந்த ஐஐடி பாசத்துக்கான காரணத்தை கடைசியில் பார்க்கலாம்.
அந்த அதிகாரி பரிந்துரைத்தது போல, 162 ஏக்கர் நிலத்தில், ஒரு உலகத் தரம்வாய்ந்த கல்வி நிலையத்தை அமைத்திருக்கலாம்தானே ? தமிழ் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளித்து, அவர்களை சிறப்பான பொறியாளர்களாகவும், வல்லுனர்களாகவும் உருவாக்கியிருக்க முடியும்தானே ?
ஏற்கனவே 617 ஏக்கர் தமிழ் நிலத்தை வைத்துக் கொண்டு, தமிழர்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத சென்னை ஐஐடிக்கு எதற்காக மேலும் ஒரு 162 ஏக்கர் என்பதுதான் அனைவரும் எழுப்பும் கேள்வி.
ஒரு வாதத்துக்காக, இந்த நிலத்தை விலை கொடுத்து வாங்க ஐஐடிக்கு வசதி இல்லை என்று கூறலாம். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆராய்ச்சிக்காக மட்டுமே, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை 750 கோடியை சென்னை ஐஐடிக்கு ஒதுக்கியுள்ளது. இணைப்பு. இந்த நிதி ஆராய்ச்சிக்காக மட்டும். இந்த நிதியை ஏன் நிலம் வாங்க ஐஐடி பயன்படுத்தி, தமிழக அரசுக்கு இதற்கான தொகையை செலுத்தக் கூடாது ?
அது மட்டுமல்லாமல், மத்திய அரசின் செல்லப் பிள்ளையான ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், மனித வள மேம்பாட்டுத் துறைக்கு, நிலம் வாங்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு அடுத்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையிலேயே இதற்கான தொகை நிச்சயமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆகையால் இந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கும் சக்தி, சென்னை ஐஐடிக்கு நிச்சயம் உண்டு.
இந்த 162 ஏக்கர் நிலம், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. அரசு ஒதுக்கியுள்ள இந்த நிலத்தின் சர்வே எண்களில் ஒன்றை எடுத்து, பத்திரப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள நில விலைகளின்படி, தற்போது அந்த இடத்தின் கைட்லைன் வேல்யூவின்படி கணக்கிட்டால், 162 ஏக்கர் நிலத்தின் மொத்த விலை 562 கோடி. எதற்காக இந்த 562 கோடியை தமிழகத்துக்கு எந்த பயனையும் தராத சென்னை ஐஐடிக்கு வழங்க வேண்டும் ?
இந்த நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது, 24 ஏப்ரல் 2017 அன்று. இவையெல்லாம் நடந்த பிறகு, பிப்ரவரி 2018ல்தான், சென்னை ஐஐடி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், தமிழை அவமானம் செய்தது ஐஐடி நிர்வாகம். அதற்கு அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. இணைப்பு வழக்கம் போலவே, பிஜேபியினர், இதற்கும் முட்டுக் கொடுத்து, இதில் என்ன தவறு என்று வியாக்கியானம் பேசினார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகாவது, தமிழக அரசு, இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, உரிய விலையை கொடுத்து நிலத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டுமா வேண்டாமா ?
பாரதிய ஜனதா கட்சி மற்றும் பார்ப்பனீயத்தின் செல்வாக்கு, தமிழகத்தை எந்த அளவுக்கு ஆட்டுவிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆமாம் நான் ஒரு பாப்பாத்திதான் என்று சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாக அறிவித்தவர்தான் ஜெயலலிதா.  ஆனால் அவர் ஆட்சியில் கூட, பார்ப்பனீயம் இப்படி கோலோச்சியதில்லை. பார்ப்பனியத்தின் அடையாளமாக திகழக் கூடிய காஞ்சிபுரம் மடாதிபதிகளை கொலை வழக்கில் சிறையில் அடைத்தவர்தான் ஜெயலலிதா.
ஆனால், இன்று ஆட்சியில் இருப்போர், மைலாப்பூர் ப்ரோக்கர் குருமூர்த்தி மற்றும் ஒரு சாதாரண ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதனின் சொல்படியெல்லாம் ஆடும் கைப்பாவைகளாக ஆடிக் கொண்டிருப்பதுதான் தமிழகத்தை பிடித்துள்ள சாபக்கேடு.
இது தொடர்பாக முதன் முதலில் கடந்த வியாழனன்று செய்தி வெளியிட்டது. இணைப்பு அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தி, இது தொடர்பான அரசாணை வெளியே எங்கும் செல்லக் கூடாது. கோப்புகளை ரகசியமாக வைத்திருங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
அவர் ரகசியமாக வைக்கச் சொன்ன அந்த அரசாணை, சவுக்கு வாசகர்களுக்காக இதோ.




தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், உடனடியாக இது இலவசமாக வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இந்த நிலத்துக்கான சந்தை விலையையாவது, ஐஐடி நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
சென்னை ஐஐடியின் மீது கிரிஜா வைத்தியநாதனுக்கு ஏன் இத்தனை கரிசனம் ?
பார்ப்பனீயத்தின் மகுடமாக திகழ்வது ஐஐடி என்பது தவிர வேறு ஒரு காரணமும் இருக்கிறது. கிரிஜா வைத்தியநாதன், தன் இயற்பியல் பிஎச்டி படிப்பை, சென்னை ஐஐடியில்தான் படித்தார்.

பாவம் இவள் ஒரு பாப்பாத்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக