திங்கள், 14 மே, 2018

சிதம்பரம் - நிர்மலா கருத்து மோதல்

சிதம்பரம்,நிர்மலா,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்,கருத்து மோதல்தினமலர் :புதுடில்லி : 'ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமனின் பதவியை பறித்துவிட்டு, அவரை வருமான வரித் துறையின் வழக்கறிஞராக நியமிக்கப் போகின்றனர்' என்ற, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின், 'டுவிட்டர்' பதிவு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மனைவி
நளினி, மகன் கார்த்தி மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், தங்கள் வெளிநாட்டு சொத்துக்களை குறித்து வெளியே சொல்லாததை அடுத்து, அவர்கள் மீது வருமான வரித் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதைப் போலவே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் வெளிநாட்டில் சொத்து சேர்த்த வழக்கில், அவரது குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் பதவி விலகும்படி நேர்ந்தது.


சிதம்பரம் குடும்பத்தினர் மீது வருமானவரித் துறை நடவடிக்கையை அடுத்து, அவர் மீது ராகுல் நடவடிக்கை எடுப்பாரா என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், தன் டுவிட்டர் பக்கத்தில், கருத்து பதிவு செய்திருந்தார்.

இதற்கு சிதம்பரம், 'ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமனை பதவி விலக்கி, வருமானவரித் துறை வழக்கறிஞராக நியமிக்கப் போகின்றனர்' என, டுவிட்டரில், பதில் பதிவு செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக