திங்கள், 7 மே, 2018

மணல் மாபியா.. போலீஸ்காரர் அடித்து கொலை ,, நெல்லை மாவட்டத்தில் காவலர் ஜெகதீஷ் .

 Sand mafia: Police man beaten to death in Nellai district tamil.oneindia.com -Veera Kumar சென்னை: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெகதீஷ் என்பவர் இரும்பு கம்பியால் தலையில் அடித்தும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
பரப்பாடி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முற்பட்டபோது நேற்று இரவு ஜெகதீஷ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் காயத்தோடு அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ரோந்து செல்வதாக பைக்கில் கிளம்பியுள்ளார் ஜெகதீஷ். ஆனால், அவரை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம்பியாற்றில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தியபோது, மணல் கடத்தல்காரர்கள், ஜெகதீஷை கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில், கனிம வளத்திற்காக மாபியாக்களால், அதிகாரிகள் சிலரின் துணையோடு, கடற்கரை மணலும், பிற தேவைகளுக்காக ஆற்று மணலும் கொள்ளையடிக்கப்படும் நிலையில், போலீசாரையே அடித்து கொல்லும் அளவுக்கு அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை இழந்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக