புதன், 23 மே, 2018

கொலைகார அனில் அகர்வால்".. லண்டன் வீடு முன்பு திரண்டு தமிழர்கள் போராட்டம்!


லண்டனில்  உள்ள ஸ்டெர்லைட் வேதாந்தா தலைமை நிலையம் மற்றும் அவரது  வீட்டை முற்றுகையிட்டு   போராட்டம்  ஒன்று இன்று மாலை நடைபெற்றது. Mathi - Oneindia Tamil  லண்டன்: தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து லண்டனில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நாசகார தொழிற்சாலையை மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் 10 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினர். இது உலகத் தமிழர்களை உலுக்கியுள்ளது. லண்டனில் அனில் அகர்வால் வீடு முன்பாக ஒன்று திரண்ட தமிழர்கள் போராட்டத்தை நடத்தினர். கொலைகார அனில் அகர்வால் இந்த வீட்டில்தான் இருக்கிறார் என முழக்கங்கள் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக