வெள்ளி, 25 மே, 2018

விமர்சகரை விளாசிய கிருத்திகா உதயநிதி .. காளி படம் ..

Siva - Oneindia Tamil புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி-வீடியோ சென்னை: காளி படத்தை விமர்சித்த புளூ சட்டை மாறனை விமர்சித்துள்ளார் கிருத்திகா உதயநிதி 
 காளி படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி புளூ சட்டை மாறன் தன் படத்தை விமர்சித்த விதம் பிடிக்காமல் அவரை விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
 மாறன் மறுக்கவே வீடியோ மூலம் தனது கருத்தை பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளார். மாறன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கிருத்திகா கூறியிருப்பதாவது, 
 விமர்சனம் விமர்சனம் புளூ சட்டை சாரின் காளி பட விமர்சனத்தை நான் விமர்சனம் செய்யப் போகிறேன். படத்தை விமர்சிப்பது என்றால் கதபாத்திரங்கள் பற்றி பேசுவது, திரைக்கதை பற்றி ஆராய்வது, நடிப்பு எப்படி, பாடல்கள் எப்படி என்று அனைத்தையும் பற்றி பேச வேண்டும். விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி ஒரு படத்தை முழுதாக எடுத்து விமர்சனம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு விஜய் ஆண்டனியின் நடிப்பை பற்றியும், படத்தை ஒன்லைனில் சொல்வதும், இந்த படத்தை பாருங்க, பார்க்காதீங்க என்று விமர்சனம் செய்துவிட்டு இது தான் விமர்சனம் என்று புளூ சட்டை சொல்லும்போது அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. காப்பி காப்பி எனக்கு இவ்வளவு தான் நடிப்பு வரும் என்று விஜய் ஆண்டனி பல பேட்டிகளில் கூறியுள்ளார். மக்கள் அவரை ஒரு நடிகராக, ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதை என்னமோ நீங்க புதுசாக கண்டுபிடித்த மாதிரி உங்களின் விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்கள். 
விஜய் ஆண்டனி கூறியதை தான் நீங்கள் காப்பியடித்து கூறியிருக்கிறீர்கள். முயற்சி முயற்சி காளி படம் 80கள், 90கள் ஃபீலில் இருக்கிறது என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.80கள், 90கள் ஃபீலில் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு எடுத்திருக்கும்போது வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள். 
 
இதை எல்லாம் குறையாக சொல்லும்போது படத்தை பார்த்து உங்களுக்கு என்ன புரிந்தது என்பது எனக்கு தெரியவில்லை. புரியாமல் புரியாமல் கதையே 80கள், 90களில் நடப்பது போன்று வைத்துள்ளேன். இது தான் வேண்டும் என்று எடுத்துள்ளேன். இது கூட புரியாமல் விமர்சனம் கொடுக்கிறீர்கள். 1960களில் ஹாலிவுட்டில் மியூசிக்கல் படம் வரும். அது போன்று தற்போதும் எடுக்கிறார்கள். அப்படி என்றால் அதை எல்லாம் எப்படி விமர்சனம் செய்வீர்கள். காமெடி காமெடி எந்த தகுதியின் அடிப்பைடயில் விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 
 
நான் காமெடியாக வைத்த காட்சிகளை புளூ சட்டை சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளார். எத்தனையோ நல்ல விஷயம் இருக்கும்போது யோகி பாபு காமெடியாக சொன்னதை சீரியஸாக எடுத்துள்ளீர்கள். 
ஹாலிவுட்டில் பாய்ஹுட் என்று ஒரு படம் வெளியானது. ஒரு பையன் பிறக்கிறான், 12 வயது வரை வளர்கிறான். அதை தான் படமாக எடுத்தார்கள். இந்த படத்தை புளூ சட்டை விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும் என்றால், ஒரு குழந்தை பிறக்கிறது, அந்த குழந்தைக்கு பின்னால் இயக்குனர் கேமராவை தூக்கிக் கொண்டு லோலோவென்று 12 ஆண்டுகளாக சுற்றியுள்ளார். 
இந்த பையன் சாப்பிடுவதும், தூங்குவதும், விளையாடுவதும் தான் ஒரு படமாக எடுத்துள்ளார்கள். இந்த மொக்கை படத்தை பார்ப்பதற்கு பார்க்காமல் இருக்கலாம் என்று கூறியிருப்பார். அந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது. உங்களின் விமர்சனம் ஒரே மாதிரி இருக்கிறது. கட், காபி, பேஸ்ட் மாதிரி இருக்கிறது. புரிந்து கொண்டு விமர்சித்தால் மகிழ்ச்சி என்றார் கிருத்திகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக