ஞாயிறு, 20 மே, 2018

எடியுரப்பா அடித்த கொள்ளைகள் விபர பட்டியல்

Thamizh Inian : இவர்தான் எடியூரப்பா!
எடியூரப்பா யார்? மகன் - மருமகன்களுக்கு கோடிக்கணக் கான அரசு நிலங்களை ஒதுக்கியது, மத்திய அரசு கையிலெடுத்து நடத்த வேண்டிய மாபெரும் கனிமவள சுரங்கங்களை தனியார் சட்டவிரோதமாக எடுக்க ஆதரவு கொடுத்தது, அதன் மூலம் ரொக்கம் மற்றும் நிலம், நகைகள், பங்குப் பத்திரம், என ரூ.25ஆயிரம் கோடிகளுக்கு மேல் பெற்றது, இவை அனைத்தும் லோக் ஆயுக்தா விசாரணையில் சான்றுகளோடு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் உள்ளது. இதனால் ஆட்சியை இழந்து சிறைக்குச் சென்றவர் தான் இந்த எடியூரப்பா!!!
எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் அமைச் சரவையில் இடம் பெற்றிருந்த ரெட்டி சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து அரசு அனுமதி பெறாமல் சீனாவிற்கு இரும்புத்தாதுக்கள் கொண்ட மணலை கப்பல் கப்பலாக அனுப்பி வைத்தனர். இதன் மூலம் சுமார் ரூ.30,000 கோடிகளுக்கு மேல் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருநாடக் லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் ஊழல் பணம் மட்டும் ரூ.16,000 கோடிகள் எடியூரப்பாவிற்குக் கைமாறியிருக்கிறது. லோக் ஆயுக்தா வெளியிட்டுள்ள பட்டியலில் ஈஸ்ட் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம், சுரங்க ஒப்பந்தங்கள் பெற எடியூரப்பா குடும்பத்துக்கு நிலம், பணம், நகைகள், பங்கு பத்திரங்கள், வைப்புத்தொகை போன்ற பலவகைகளில் கையூட்டு கொடுத்த விவரங்கள் அடங்கியுள்ளன. அந்த அறிக்கையின் 22ஆம் அத்தி யாயத்தில், எடியூரப்பா குடும்பம் பல்வேறு வகைகளில் சுமார் 30 கோடி ரூபாய்களை மேற்படி கம்பெனியிட மிருந்து லஞ்சமாகப் பெற்ற விவரங்கள் அடங்கியுள்ளன. இதனடிப்படையில், எடியூரப்பாவின் மீது முதல்தகவ லறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. எடியூரப்பா செயலக அதிகாரிகள் 784 பேருக்கு கோடிக்கணக்கில் பணம், பங்களா - வீடுகள், மற்றும் தங்க வைர நகைகள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்களும் சந்தேஷ் ஹெக் டேவின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

2006ஆம் ஆண்டு எடியூரப்பா துணை முதல்வராக இருந்த போது தனது மகன், மருமகன் இருவருக்கும் பெங்களூர் வளர்ச்சி நிறுவனம் எனும் அரசு நிறுவனத்துக்குரிய நிலங்களை சொற்ப லட்சங்களுக்கு தாரைவார்த்தார். அதன் பிறகு எடியூரப்பா 2008இல் முதல்வராக வந்த பிறகு தாரைவார்த்த நிலங்களுக்கு தனது மகன் மற்றும் மருமகன் பெயரில்
பட்டா கொடுத்து விட்டார். பட்டா கொடுத்த சில நாட்களிலேயே அந்த நிலங்கள் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த ரூ.40 கோடி ரூபாய் பரிமாற்றமும் எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பதவி விலக பாஜக தலைமை அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது நடந்தது ஆகும்.
24.8.2014-அன்று லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே வெளியிட்டுள்ள எடியூரப்பா விற்கு எதிரான ஆய்வறிக் கையின் விபரம்
சுரங்க ஊழலால் 2009 மார்ச் முதல் 2010 மே வரையிலான 14 மாதங்களில் மாநில அரசுக்கு ரூபாய் 1,827 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் உரிமை யாளராக இருப்பதால், பெல்லாரி மாவட்டத்தில் மாஃபியா போன்ற நிலைமை காணப் படுகிறது. அரசு அதிகாரிகளுக்கும் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் பங்கிருக்கிறது. இதற்கு முதல்வர் எடியூரப்பா தான் பொறுப் பாளர் என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க அமைச்சரின் சுரங்க நிறுவனம் நினைத்தால் மற்ற சுரங்கங் களை சிதைக்க முடியும் என்றும், சட்ட விரோத இச்சுரங்கத் தொழிலில் ஈட்டிய பணத்தை வெளி நாடுகளில் பதுக்கி உள்ளது தெரிய வந்துள்ளதாகவும், இவை குறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் விசாரிக்க வேண்டும் என்றும் சரமாரியாக பா.ஜ.க அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது
சந்தோஷ் ஹெக்டேவின் விசா ரணை அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பிறகு கருநாடக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக் கையில்: சட்ட விரோதத் தொழில் தொடர் பான லோக்ஆயுக்தா விசாரணைப் பரிந்துரைகளை ஆளுநர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அரச மைப்புச் சட்டம் 22இல் குறிப் பிட்டுள்ள பரிந்துரையின்படி எடியூரப்பா மீது குற்றவியல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இதுமட்டுமா? அவர் துணை முதல் வராக இருந்த போதும், முதல்வராக இருந்த போதும் நிர்வாகம் மிகவும் பாழ்பட்டது, இது தொடர்பாக அவரது ஆட்சிக்காலத்தில் அதிக அளவு மோசமான நிர்வாகம் என்ற தலைப்பில் கருநாடகாவில் உள்ள அனைத்து நாளிதழ்களும் தினசரி தலையங்கம் எழுதும் நிலைக்கு சென்றுவிட்டது, எடியூரப்பா ஜோதிடத்திலும், மூட நம்பிக்கை களிலும் அதிக அளவு பற்றுகொண்டவர். சட்டமன்றத் திற்கு வருவதற்கு கூட ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்று பூசைகள் செய்து பிறகு புறப்படுவார். சோதிடர் பேச்சைக் கேட்டு, நிர்வாண மாகப் படுத்துக் கிடந்ததும் உண்டு.
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ் வரன் கோவிலுக்கு, ரிஷப வாகனம் தங்கத்தில் செய்ய ரூபாய் 40 லட்சம் எடியூரப்பாவால் கொடுக்கப்பட்டது. சனீஸ்வரன் கோவிலுக்கு மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு கோயில் களுக்கும் அள்ளி வழங்கிய நன் கொடைகள் அனைத்தும் அவரது ஊழல் பணத்தில் இருந்து கொடுக்கப் பட்ட பங்கு ஆகும்.
இதோ சில பட்டியல்:
*சாமியாரினி மாதா அமிர் தானந்தமயி நிறுவனங்களுக்கு பெங் களூருவுக்கு அருகில் ரூ. 5 கோடி மற்றும் 15 ஏக்கர் நிலம்.
*வொக்கலிக்கர்களின் அடிச்சுச் சங்கிரி என்ற மடத்திற்கு ரூ. 5 கோடி.
*எடியூர் சித்த லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திற்கு ரூ. 10 கோடி.
* ஆந்திராவில் திருப்பதியில் விருந் தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
*கேரளாவில் சபரிமலையில் விருந் தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
* திபெத்தில் மானசரோவர் செல்லும் புனித பயணிகளுக்கு ரூ. 3 கோடி.
*குல்பர்காவில் தத்தாத்ரேய பீடத்திற்கு ரூ. 2 கோடி.
*சிக்மகளூர் ரம்பாபுரி சி*சோ மேஸ்வர மடத்திற்கு ரூ. 3 கோடி.
* சிக்மகளூர் அரிஅரபுரா மடத்திற்கு ரூ. 1 கோடி.
* 15ஆம் நூற்றாண்டு சாமியாரான கனகதாசாவின் நினைவிடம் கட்ட ரூ. 10 கோடி.
*சிரவனபெலகுலா பாஹுபலி கோவில் வளாகத் திற்கு ரூ. 5 கோடி.
*ராகவேந்திரா மந்த்ராலயா விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
*காசி விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
* அரித்வார் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
மேற்கண்ட பட்டியலின் மொத்த தொகை 59.75 கோடியாகும். இந்தியா டுடே டிசம்பர் 2010 இவை அனைத்தும் எந்த பணத்திலிருந்து எடியூரப்பாவால் வழங்கப்பட்டது என்பது விளக்கப்பட்டிருந்தது. மேலே உள்ள கோடிகள் அனைத்தும் அவரது உழைப்பால் வந்த பணம் அல்ல, மேலும் இவை கருநாடக அரசு கஜானாவில் இருந்து கொடுக்கப் பட்ட பணமும் அல்ல, 1979ஆம் ஆண்டு இவரது சொத்துமதிப்பு வெறும் ரூ.22 லட்சம் மட்டுமே என்று இது சிறிகாரிப்பூர் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்ற போது அவரிடம் இருந்த சொத்துகள்.
1983ஆம் ஆண்டு இவர் கருநாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது இவரது சொத்துமதிப்பு ரூ.1 கோடியைத் தாண்டவில்லை.
20 ஆண்டுகளுக்சகு ரூ.50,000 கோடிகளை ஊழல் பணமாக பெற்ற இவர் தான் - இன்றைய கருநாட காவின் பெரும்பான்மை இல்லாத ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் ஆட்சியின் முதல் அமைச்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக