செவ்வாய், 29 மே, 2018

அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் - திமுக அறிவிப்பு

அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் - திமுக அறிவிப்பு
மாலைமலர் :முதல்வர் பதவி விலகும் வரையில் சட்டமன்றத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்த நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக தாக்கல் செய்தது. அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், ஸ்டாலினின் உரை முடிந்ததும்  திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அந்த உரையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபையில் பங்கேற்க போவதில்லை என மு.க ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக