செவ்வாய், 29 மே, 2018

மானாமதுரை கச்சநத்தத்தில் அகமுடையார் ஜாதி வெறியாட்டம்- இருவர் வெட்டி படுகொலை- 10 பேர் படுகாயம்

சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் கால்மேல் கால்போட்டு டீ குடித்தார்கள் என்றே ஒரே காரணத்தால் இதைக் கண்டு பொறுக்கமாட்டாத அகமுடையார் ஜாதி  வெறியர்கள் கும்பலாக கிராமத்திற்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். 6 பேர் உயிருக்கு போராடிவருகிறார்கள்
கச்சநத்தத்தில் போலீஸ் குவிப்பு tamil.oneindia.com - mathi. : சிவகங்கை: மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராம மக்கள் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் சமூகத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.
பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்துள்ளது."இதைத் தொடர்ந்து நேற்று இரவு ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராம மக்கள் மீது தாக்குதல்.."பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்" இருவர் வெட்டி படுகொலை.. படுகாயம் அடைந்த ஆறுமுகம் மற்றும் மருது என்ற சண்முகநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 கச்சநத்தத்தில் போலீஸ் குவிப்பு தற்போது கச்சநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

 குற்றவாளிகளை கைது செய்க குற்றவாளிகளை கைது செய்க இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆதிக்க சமூகக் குற்றவாளிகளை அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்பது கச்சநத்தம் கிராம மக்களின் கோரிக்கை. கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் போது நடவடிக்கை எடுக்காததும் தற்போதைய நிலைக்கு காரணம் என்பதும் மக்களின் குற்றச்சாட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக