ஞாயிறு, 27 மே, 2018

உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி தாக்குதலுக்காகவே வேல்முருகன் கைது?

If you go with Velmurugan you have to go jail only: police வேல்முருகனோடு சென்றால் ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும் என திமுக புள்ளியை தூத்துக்குடி போலீஸ் மிரட்டிய சம்பவம் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் குண்டடிப்பட்டவர்களை நேரில் சந்திக்க சென்ற வேல்முருகன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை புழல் சிறையில் வைக்குமாறு திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வேல்முருகன் கைதுக்கு முன்னதாக விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து திமுக புள்ளி கூறிய அதிரவைக்கும் தகவல்..
சென்னை விமான நிலையம். நாள் 25.5.18, நேரம் மதியம் 1 மணி தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகக் கிளம்பி வந்திருந்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.



அந்த இடத்தில் தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இருந்திருக்கிறார். ‘
அமைதிப் பேரணியாகப் போனவங்க மேல இப்படியொரு துப்பாக்கி சூடு நடத்தியிருக்காங்க..வேதனையா இருக்கு…’ என வேல்முருகன் கூற, ‘ மொத்த ஊரையுமே சுடுகாடா மாத்திட்டாங்க…’ என தி.மு.க புள்ளியும் வேதனைப்பட்டிருக்கிறார்.
இதன்பிறகு நடப்பு அரசியலைப் பற்றி விவாதித்துள்ளனர். இதன்பிறகு விமான நிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.
2.30 மணியளவில் விமானம் தூத்துக்குடியை வந்தடைந்தது. ‘ அண்ணே…நான் வெளியே இருக்கேன். நீங்க உங்க பெட்டியை எடுத்துட்டு வாங்க…’ என தி.மு.க புள்ளி கூற, ‘ பத்து நிமிஷத்துல வந்துர்றேன். உங்ககூடயே நானும் வர்றேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றார் வேல்முருகன்.
விமான நிலைய வாசலுக்கு வந்த தி.மு.க புள்ளிக்கு, அங்கிருந்த சூழல் எதையோ உணர்த்தியது.
அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம், ‘ என்ன சார்…வழக்கத்துக்கு மாறா இவ்வளவு போலீஸ் வந்திருக்கீங்க…’ ‘
வேல்முருகனைப் பார்க்கறதுக்காக வந்திருக்கோம்’ ‘ என்கூடதான் வர்றேன்னு சொல்லியிருக்கார். அவருக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்…’ ‘ அப்படியா…அவர்கூடயே நீங்க போறதா இருந்தா ஜெயிலுக்குத்தான் போகனும்…பரவாயில்லயா…’ ‘
என்ன சார் சொல்றீங்க…?’ ‘ நீங்க கிளம்புங்க சார்…அவர்கிட்ட எங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு…’ எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த இடத்துக்கு வந்தார் வேல்முருகன்.
அவரிடம் பேசிய தி.மு.க புள்ளி, ‘ அண்ணே…உங்களைக் கைது பண்ணப் போறாங்க…கட்சி ஆளுக யாரும் கூட வரலையா?’ எனக் கூற, ‘ மக்களுக்கு ஆறுதல் சொல்றதத் தடுக்கறதுக்காக கைது பண்ண வந்திருப்பாங்க…’ எனக் கூறிவிட்டு போலீஸ் வாகனத்தில் ஏறிச் சென்றார் வேல்முருகன்.
புதுக்கோட்டை – சாயர்புரம் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் அவரைத் தங்க வைத்தனர். நேற்று இரவு வரையில் இப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில், ‘உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி தாக்குதலுக்காகத்தான் கைது செய்திருக்கிறோம்’ எனக்கூற, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் வேல்முருகன்.

Read more at: https://tamil.oneindia.co

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக