செவ்வாய், 8 மே, 2018

அடியோடு நுழைவுத்தேர்வையே ரத்து செய்தார் கலைஞர்!

Thirumeni Saravanan : திமுகவை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் படிக்க
வேண்டாம் ...
தமிழக இளைஞர்களே, மாணவ மாணவிகளே... கலைஞரின் அருமை இப்போதாவது புரிகிறதா?? ஒரு நுழைவுத்தேர்வுக்கே இப்படி கொடுமைப்படுத்துகிறார்களே... சாதாரண தேர்வுமையத்தை கூட கூடுதலாக திறக்க மறுக்கிறார்களே, போராடசெய்கிறார்களே... திமுக ஆட்சிகாலத்தில், தமிழக மாணவர்களின் உயர்கல்விகாக கலைஞர் செய்த சாதனைகளை ஒப்பிட்டு பாருங்கள்..
1. சமூதாயத்தில் மிக பிற்படுத்தப்பட்டோர்க்கு MBC இட ஒதுக்கீடு...
2. கொங்கு வேளாளர் போன்ற சமூகங்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளை வழங்கியது...
3. கிராமப்புற மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு & போனஸ் மதிப்பெண்..
4. பட்டதாரி இல்லா குடும்பத்திற்கு தனி சலுகைகள்...
5. மாநில & மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி..
6. தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு..
7. கல்வியில் மிகவும் பின்தங்கிய அருந்ததியினர், இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு..
8. மாற்று திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு...
கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்ப்படிப்பில் சலுகை..
9. அதிகளவில் அரசு கல்லூரிகள், பல்கலைகழகங்களை துவக்கியது..

10. மாணவர்களின் அலைச்சலை குறைக்க பொறியியல் கவுன்சலிங் முறையை கொண்டுவந்தது..
11. மாணவர்கள் படிக்கும் திறனையும், பாடத்திட்டத்தையும் மேம்படுத்தும் சமசீர் கல்வியை கொண்டுவந்தது..
12. இலவச பஸ் பாஸ், மதிய உணவோடு முட்டை வழங்கி, உண்மையான சத்துணவை வழங்கியது..
13. அரசு பள்ளிகள் & கல்லூரிகளில் கணிப்பொறி அறிவியல் கல்வி..
14. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற திட்டத்தை செயல்படுத்தியது..
அனைத்திற்கும் மேலாக
அடியோடு நுழைவுத்தேர்வையே ரத்து செய்தது...
திராவிட
சூத்திர
திமுக அரசின் கல்வி சாதனைகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...
இந்தகைய சாதனைகளால், தமிழ்நாட்டை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏழை எளியவர்களும், சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்களும், கிராப்புற & சிறு நகரங்களை சேர்ந்தவர்களும் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வியில் சேர வழிவகுத்ததுடன், அவர்கள் நல்ல வேலைவாய்ப்பை பெரும் வாய்ப்புகளையும்
கலைஞரின் திராவிட திமுக ஆட்சி தமிழகத்தில் உருவாக்கித்தந்தது...
ஆனால், பாசிஸ ஹிந்துத்துவா RSS பிஜேபி மத்திய அரசும், அதற்கு அடிமையாக செயல்படும் பினாமி அதிமுக எடுபிடி அரசும், தமிழக மாணவர்களின் நலனை, எதிர்காலத்தை அழித்தொழிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.. மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும்
இந்த நாசகார ஆட்சிகளின்
மாற்றமே
இனி நமக்கிருக்கும்
ஒரே தீர்வு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக