புதன், 30 மே, 2018

வேல்முருகன் தேச துரோக வழக்கில் ஸ்டான்லி மருத்துவமனையில் கைது!

Velmurugan arrested for Sedition case tamil.oneindia.com/authors/lakshmi-priya.: சென்னை: தேச துரோக வழக்கில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டார்.
காவிரி போராட்டத்தின்போது உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியை தாக்கி போராட்டம் நடத்தியதற்காக விழுப்புரம் போலீஸார் வேல்முருகனை தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வைகோ கூறியதை ஏற்று அவர் இரு நாட்களுக்கு பிறகு கைவிட்டார்.

இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேல்முருகன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் காவிரி வாரிய விவகாரத்தில் நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த வேல்முருகனை இன்று நெய்வேலி போலீஸார் மருத்துவமனையில் சென்று கைது செய்தனர்.
அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டார். நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக