வியாழன், 17 மே, 2018

கர்நாடகா ஆளுநர் முடிவு எதிரொலி- பீகாரில் ஆட்சி அமைக்க அழைக்க ஆர்ஜேடி வலியுறுத்தல்!

Mathi - Oneindia Tamil  கர்நாடகா ஆளுநர் முடிவால் கோவா பாஜக அரசுக்கு நெருக்கடி- ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்.
 பாட்னா: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததைத் தொடர்ந்து பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போர்க்கொடி தூக்கியுள்ளது.
 கர்நாடகாவில் தேர்தலுக்குப் பின் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.  இக்கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்றிருக்கிறது. 
ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததால் பெரும் அரசியல் சாசன நெருக்கடி உருவாகி உள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் இப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கலகக் குரல் எழுப்பியுள்ளது. 
கோவாவைத் தொடர்ந்து பீகாரில் ஆர்ஜேடி போர்க்கொடி தூக்கியுள்ளது. 
2015-ம் ஆண்டு பீகார் தேர்தலில் ஆர்ஜேடி 80; ஜேடியூ 70; பாஜக 53 இடங்களைப் பெற்றன. 
முதலில் ஆர்ஜேடி ஆதரவுடனும் தற்போது பாஜக ஆதரவுடனும் ஜேடியூ அரசு நடைபெற்று வருகிறது. கர்நாடகா ஆளுநர் முடிவின் அடிப்படையில் தனிப்பெரும் கட்சியான 80 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தங்களையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிறது ஆர்ஜேடி. அதனால் ஜேடியூ- பாஜக அரசை கலைத்துவிட்டு தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிறது ஆர்ஜேடி. இதனை வலியுறுத்தி நாளை 80 எம்.எல்.ஏக்களுடன் போராட்டம் நடத்த உள்ளதாக லாலு பிரசாத் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக