வெள்ளி, 25 மே, 2018

ஸ்டெர்லைட் .. கன்னடர்கள் ஆர்ப்பாட்டம் .. பெங்களூர் ஸ்டெர்லைட் அலுவலகம் முன்பாக

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு எதிராகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மே 24 ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். சுமார் ஐம்பது முதல் நூறு பேர் வரைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக அரசு, காவல்துறை, மத்திய அரசு, அரசியல் காட்சிகள் என சகலரையும் விளாசினார்கள்.
தமிழர்களுக்காகப் போராடிய கன்னடர்கள்!

மின்னம்பலம்: காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே இரு மாநிலங்களிலும் உள்ள சிற்சில அமைப்புகளால் வெறுப்புணர்வு பல வருடங்களாக தூண்டப் பட்டுவந்திருக்கிறது. இதற்கு இலக்காகி பெங்களூருவில் பல தமிழர்கள் தாக்கப்பட்டு, தமிழர்களின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில், தூத்துக்குடியில் நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் கன்னடர்கள். மொழி தாண்டிய மனித நேயத்துக்கான அடையாளமாக இந்த போராட்டம் பார்க்கப்பட்டு, பாராட்டப்படுகிறது.
இதுகுறித்து எழுத்தாளர் மணிகண்டன் தனது வலைப்பூவில் செய்துள்ள பதிவு கன்னட -தமிழ் இனங்களுக்கு இடையே உண்டாக்கப்படும் பகைமை எனும் மாயாவாதங்களைத் தகர்ப்பதாக அமைந்துள்ளது.
அந்தப் பதிவு இதோ...

”ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு எதிராகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மே 24 ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். சுமார் ஐம்பது முதல் நூறு பேர் வரைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக அரசு, காவல்துறை, மத்திய அரசு, அரசியல் காட்சிகள் என சகலரையும் விளாசினார்கள்.
சம்பந்தமேயில்லாமல் இந்த கட்டிடத்தில் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதலில் குழப்பமாக இருந்தது. வேதாந்தாவின் அலுவகம் இன்னமும் அங்கே இருப்பதாகத்தான் கூகிள் காட்டுகிறது. ஆனால் இரண்டரை மாதத்துக்கு முன்பாகவே காலி செய்துவிட்டுப் போய்விட்டதாக வணிக வளாக ஆட்கள் வந்து சொன்னார்கள். போராட்டக்காரர்கள் ஒரு அதட்டு அதட்டியதும் அவர்கள் ஓரமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.
போராட்டக்காரர் ஒருவர் கட்டிடத்தின் மேல் தளங்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் ஆவேசமாக பேசினார்.
'நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள் என்று தெரியும்.. நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை... உங்களிடம் ஒன்று சொல்வதற்காக வந்திருக்கிறோம். உங்கள் பாதங்களுக்கு கீழாக அங்கே சுடப்பட்டவர்களின் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது' என்று அவர் பேசியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

கூட்டத்தினரிடையே தமிழ், கன்னட, இந்தி, ஆங்கிலம் என வெவேறு மொழிகளில் பேசினார்கள். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கர்நாடகத்தில் இவ்வளவு எதிர்ப்பைச் சம்பாதிப்போம் என்று கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். இந்தப் போராட்டம் முறையான அனுமதி பெறாத போராட்டம் என்பதால் போலீஸ் நிறைய வந்திருக்கிறார்கள்.
'கைது செய்வீர்களா' என்று கேட்டேன்.
'வாய்ப்பில்லை' என்றார்கள்.
கர்நாடகக் காவல் துறை ஒப்பீட்டளவில் மிகுந்த நாகரிகம் மிக்கவர்கள். போராட்டம் நடக்கும்போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக நின்றுகொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தார்கள்.
தமிழர்களுக்கு ஒன்று என்றால் பிற மாநிலங்களில் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதெல்லாம் நாமாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். தமிழகத்தின் பிற ஊர்களைவிடவும் கன்னடத்துக்காரர்கள் கூர்மையாகத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அங்கேயிருந்த சிலரிடம் ' வாழ்த்துக்கள்' என்று கை குலுக்கினேன். சிரித்தார்கள்’’ என்று பதிவிட்டிருக்கிறார் மணிகண்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக