ஞாயிறு, 13 மே, 2018

BBC : 37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'

சராசரியாக ஒருவர் தன் கன்னித்தன்மையை தனது பதின்ம வயதின்
இறுதியில் இழக்கிறார்கள். ஆனால் இது எல்லார் விஷயத்திலும் உண்மையில்லை. மனைவியை இழந்த "ஜோசப்" என்ற 60 வயது நபர் இதை பெரும் அவமானத்திற்குரியதாகவும் ஏமாற்றத்திற்குரியதாகவும் உணர்கிறார். இங்கே அவர் தன் கதையை பகிர்ந்து கொள்கிறார்.>நான் என் 30 வயதின் இறுதிவரை கன்னி கழியாமல் இருந்தேன். இது எப்படி வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று புரியாமல் இருந்தேன். ஆனால் ஒருவித அவமானத்தையும், ஒரு வித ஆறாத வடு இருப்பது போன்றும் உணர்ந்தேன்.
நான் மிகவும் கூச்சமும், ஆர்வமும் உள்ளவன். ஆனால் தனித்துவிடப்படவில்லை. எனக்கு எப்போதும் நண்பர்கள் இருந்தனர். ஆனால் இந்த நட்பை நெருக்கமான உறவாக மாற்றும் திறன் பெற்று இருக்கவில்லை.
பள்ளியிலும் கல்லூரியிலும் என்னைச் சுற்றி இளைஞிகளும் பெண்களும் சூழ்ந்திருந்தனர். ஆனால் நான் வழக்கமாக யாரும் முயற்சிப்பது போல் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
நான் பல்கலைக்கழகத்தை சென்றடைந்தபோது என்னுடைய வழக்கமான பணிகள் இறுதிசெய்யப்பட்டன- நான் யாருடனும் உறவு வைப்பதில்லை என்று எதிர்பார்க்கப்பட்டேன். இதற்கு பெரும் காரணம், சுய கவுரவம் மற்றும் என்னை அவ்வளவு கவர்ச்சியாக யாரும் கருத மாட்டார்கள் என்ற எண்ணம் என் ஆழ்மனதில் தோன்றியது தான்.

உங்கள் பதின்ம பருவத்தின் இறுதியிலும் இருபதுகளின் தொடக்கத்திலும் மக்களுடன் பழகாமல், "மக்களுக்கு என்னைப் பிடிக்கும், பாருங்கள் அவள் என் தோழி, அதோ அவளும் என் தோழி" என்று சொல்ல முடியாது. இது நீங்கள் கவர்ந்திழுக்கும் ஆற்றல் அற்றவர் என்றும், உங்களை வலிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
நான் இதுபற்றி என் நண்பர்களிடம் பேசியதில்லை. அவர்களும் இதுபற்றிக் கேட்கவில்லை. அவர்கள் கேட்டிருந்தாலும் நான் தற்காப்புடன் பேசியிருப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் இதுபற்றி பேசுவதற்கு அவமானப்பட்டேன்.
உடலுறவில் ஈடுபடாதவர்கள் பற்றி சமூகம் வேறுவிதமாக தீர்மானிக்கிறது என்பது உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் இயல்புக்கு புறம்பாக இருப்பதாக எதையும் நினைத்தால், அது ஒருவகையில் பொதுநிலையிலிருந்து விலகியதாகத்தான் பார்க்கப்படக்கூடும்.
பெண்ணுடன் வெற்றி பெற்றால் அதை கலாசார முதலீடு என்று நான் கருதுகிறேன், குறிப்பாக நீங்கள் பிரபலமான பாடல்கள் மற்றும் படங்களையும் பருங்கள். அதில் ஒரு ஆண் ஆணாக பார்க்கப்படுவதை கலாசாரமாக காட்டியிருப்பார்கள். அரும்பு மீசை முளைத்த இளைஞன் கதாநாயகியுடன் கலவியுடன் ஈடுபட்டபின் அவனை மனிதனாக பார்க்கும் கலாசாரம்.


இவை அனைத்தும் எனக்கு அவமான உணர்வைத் தூண்டியது. பெரும்பாலான என் நண்பர்களுக்கு பெண் நண்பர்கள் இருந்தனர். அவர்கள் உறவைத் தொடங்கியதையும், பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டதையும் நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். இவை என் சுய மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வந்தது.
நான் தனியாக இருந்தேன். மனமுடைந்து இருந்தேன். ஆனால் அதை நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை. அதற்கு காரணம் உடலுறவு கொள்ளாதது மட்டும் அல்ல. நெருக்கமான உறவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நான் சற்று பின்னோக்கி திரும்பிப் பார்க்கிறேன். ஒரு 15 அல்லது 20 வருடம் இருக்கலாம். என் பெற்றோர், என் சகோதரிகள் தவிர மற்ற மனிதர்கள் என்னை தொட்டதில்லை. இதைத் தவிர உடல் தொடக்கூடிய எந்த வித தொடர்பும் இருந்தது இல்லை. எனவே, வெறும் உடலுறவை இங்கே குறிப்பிட வேண்டியதில்லை.
எனக்கு பிடித்திருந்த நபர் யாரையாவது நான் பார்க்க நேர்ந்தால், எனக்கு கிளர்ச்சி ஏற்பட்டதில்லை. மாறாக ஒருவித கவலையும் மனமுறிவும் தான் ஏற்படும். ஒரு வித நம்பிக்கையின்மைதான் நிலவியது.
என்னை புறக்கணிப்பார்களோ என்ற அச்சம் இருந்ததில்லை. புறக்கணிப்பு வாய்ப்பு இல்லை. எனக்கு கவர்ச்சியாக தெரிந்த எவருக்கும் நான் கவர்ச்சியாக தோன்றியிருக்க மாட்டேன் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்ததே இதற்கு காரணம்.
என்னுள் இருந்த தற்காப்பு அமைப்பும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண்ணை அணுகுவது தவறு என்ற ஆழமான எண்ணத்தை வளர்த்துக் கொண்டேன். அவ்வாறு அணுகுவது அவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடி என்றும் நினைத்தேன். பெண்களை பயன்படுத்தியவனாக ஒருபோதும் நான் இருக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, பெண்ணிற்கு தன் அன்றாட வாழ்க்கை பற்றியும், யார் தொந்தரவும் இன்றி அவள் இரவு கழிய வேண்டும் என்ற உறவு உண்டு.
என்னைக் கவர்ந்த பெண்களுடன் நான் எப்போதும் நண்பனாவதுண்டு. என்னுடைய காதல் உணர்வுகளை அவர்களில் பெரும்பாலானோர் சற்றும் உணரவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.


அந்த நேரங்களில் அவர்களுக்கு நான் தேவையில்லை என்று நான் உறுதியாக நம்பினேன். நான் எந்த நிலையில் இருந்து இப்போது திரும்பிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு தெரியவில்லை. என்னிடம் கவர்ச்சி இருப்பதாக நம்பிக்கை இருப்பதாக நான் நினைக்கவில்லை.
என்னை ஒரு பெண்ணும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! அவ்வாறு கேட்பது அந்த காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
நான் என் 30 வயதின் மத்தியில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறக்கூடிய அளவு மனமுறிவு கொண்டிருந்தேன். எனவே நான் மருத்துவர் ஒருவரை அணுகினேன். எனக்கு மனமுறிவு நீக்கும் மருந்துகளை அவர் பரிந்துரைத்தார். நான் மருத்துவ ஆலோசனைகளையும் பெறத் தொடங்கினேன். அப்போதுதான் நிலைமை மாறியது.
மருத்துவ ஆலோசனையின் பலனாக முதலில் நான் சிறிது நம்பிக்கை பெற்றேன். நான் எடுத்துக் கொண்ட மனமுறிவு போக்கி மருந்துகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த மருந்துகள் வெட்கம் போக்கும் மருந்தாக செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவை தவிர நானும் சற்று வளர்ந்திருந்தேன்.
யாரிடமோ கேட்கும் நிலைக்கு நானும் முன்னேறியிருந்தேன். இதன் காரணமாக சில காலம் நான் உறவுமுறைகளுக்குள்ளானேன்.
என்னுடைய முதல் டேட்டிங் குறித்து நான் ஆர்வத்துடனும் பதட்டத்துடனும் இருந்தேன். "இது நன்றாக இருந்தது, எனக்கு பிடித்திருக்கிறது என்று உணர்ந்தேன். அவளிடமும் கேட்டேன். அவளும் ஆமாம் என்றாள். அப்படித்தான் தொடங்கியது.
நான் முதன் முதலில் டேட்டிங் செய்த சில வாரத்தில் மிகவும் நெருக்கமான உறவுக்கு முன்னேறினேன். பதின்ம வயது தடுமாற்றத்தை நான் உணர்ந்தேன். ஆனால் நான் பதின்ம வயதைச் சேர்ந்தவன் அல்ல. எனவே எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தது. எனக்கு இது மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் இருந்தது. சிலர் சொல்லலாம், முதல் அனுபவம் நன்றாக இருக்காது என்று. ஆனால் எனக்கு இருந்தது.
நான் அதற்கு முன் கன்னிகழியாமல் இருந்தேன் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் அவள் கேட்டிருந்தால் நான் உண்மையை சொல்லியிருப்பேன்.
அதன் பின் 18 மாதம் கழித்து நான் என் மனைவியை என் பணியிடத்தில் சந்தித்தேன். நான் உடனடியாக அவளை உணர்ந்தேன். அவள் உண்மையில் அழகாக இருந்தாள். அழகான பெரிய கண்களைக் கொண்டிருந்தாள். கனவில் வருபவள் போல் இருந்தாள்.
நான் அவளிடம் நேரடியாக கேட்கவில்லை. எனக்காக பேசுமாறு பொது நண்பரிடம் கேட்டேன். அந்த நண்பரும் எனக்காக மணம் இணைப்பாளர் போல் நடந்து கொண்டார்.
என் முதல் டேட்டிங் 40 வயதில் நடந்தது. அதன் பின் 18 மாதம் கழித்து நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அவள் எனக்கு மிகவும் முக்கியமானவள்.

எனக்காக அவள் விழுந்தபோது நான் அதிர்ஷ்டக்காரனாக உணர்ந்தேன். அவள் தன்னை முழுமையாக வழங்கினாள், கட்டுப்பாடற்ற அன்பை பொழிந்தாள். அது மிகவும் அரிதாக இருந்தது. இதனைப் பெறுவதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும்.
என்னுடைய காம வரலாறு பற்றி அவளிடம் நான் சொன்ன போது அவள் முழுமையாக ஏற்றுக் கொண்டாள். இதுபற்றி எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எனவே நன்றாக முடிந்தது. எங்கள் உறவு வலுவாக இருந்தது. ஒருமுறை கூட அவள் என்னை அவள் விமர்சித்தது கிடையாது. அவளுடன் இருப்பது மிகவும் எளிதாக இருந்தது.
எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. 3 வருடங்களுக்கு முன் அவள் திடீரென இறந்து போனாள். எனக்கு பேரதிர்ச்சியை தருவதாக அமைந்தது
நான் அவளை மிகவும் தாமதமாக சந்தித்ததாகவும், முன்கூட்டியே இழந்ததாகவும் உணர்ந்தேன். நான் இளைஞனாக இருந்த போது அவளை சந்தித்து இருந்தால் அவளுக்கு நான் கவர்ச்சியானவனாக இருந்திருப்பேனா என்று தெரியவில்லை.
என் இளமைக் காலத்தை வருத்தத்துடன் திரும்பிப் பார்க்கிறேன். என் இளம் வயதில் நடந்திராத ஒன்றை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். என் மனதில் இதமான நினைவுகள் இல்லையே என்று நினைக்கிறேன். வேறு அனுபவங்கள் இல்லாமல் போய்விட்டனவே என்றும் நான் நினைக்கிறேன்.
இளைஞனாக இருந்தபோது அன்பு எப்படி இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சோதனை அடிப்படையிலோ, அல்லது கேளிக்கைக்கோ சில நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் எனக்கு தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவித வருத்த உணர்வு என்னுள் எழுகிறது.
எனவே நான் இதுபோன்ற நிலையில் இருக்கும் யாரிடமும் சொல்ல விரும்புவது இதைத்தான் : எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நாம் எதையும் உணர்ந்தால் அதைப்பற்றி குறுக்கீடு செய்வது பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும்?. இதுபற்றி சொல்ல எனக்கு தெரியவில்லை. யாராவது என்னைக் கேட்டால், இந்த பிரச்சினை பற்றி மறுத்து இருப்பேன். சிலர் இந்த பிரச்சினையை உணர்ந்து இருப்பார்கள்.
ஆனால், என்னைப் போன்றோர், எவருடைய கவனத்திலும் இடம்பெற மாட்டார்கள் என்பது தான் இங்கே முக்கியமானது.
ஆபத்தான விஷயங்களை இளைஞர்கள் செய்வது குறித்து நாம் கவலைப்படுவதுண்டு. போதை மருந்து, கத்தி எடுத்து குற்றத்தில் ஈடுபடுவது, இளம்பிராயத்தில் உடலுறவில் ஈடுபடுவது போன்று. எனவே சில விஷயங்களை செய்யாதது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால், யாருக்காவது பெண் நண்பரோ,அல்லது ஆண் நண்பரோ இல்லாமல் இருப்பதை நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்களாகவே கற்பனை செய்ய வேண்டாம். அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். நேரடியாக கேட்கவில்லையென்றாலும், அவரிடம் ஏன் நீங்கள் யாருடனும் ஒட்டமாட்டேன் என்கிறீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் கேட்கும் சில சந்தேகங்களுக்கு விடையளிக்க முயலுங்கள்.

பதட்டமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் யாருடனாவது இருக்க வேண்டும் என்று நினைப்பதும் சரிதான். இந்த உணர்வுகள் மனிதகுலத்திற்கானது. உங்களை நீங்கள் மறுப்பது, உங்களை மனித பரிசோதனையின் ஒரு பகுதியாக உங்களை நீங்களே மறுப்பதற்கு இணையானது.
என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயங்களில் ஒன்று, டொரண்டோ தாக்குதலில் உள்ள விளம்பரம் குறித்துதான். மக்கள் இன்னும் அன்பைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.
அன்பைத் தேடிக்கொண்டிருப்பவர்கள், ஒருவகையில் வித்தியாசமானவர்கள் என்று நினைக்கக்கூடும். நான் என் மனைவியை முதல் முறை சந்தித்த போதும் நான் இயல்பாக உணர்ந்தேன். அதன் பின்னரும் இயல்பாக உணர்ந்தேன். என்னைப் பற்றி வித்தியாசமாக எதையும் உணரவில்லை.
அன்பை எதிர்நோக்கும் அனைவரும் வெறுப்பினை சுமந்திருப்பவர்கள் இல்லை. டொரண்டோவில் தாக்குதல் நடத்தியவன் மனிதர்களை தேடினான் என்பதை இணைத்தால் அது வெட்கக் கேடானது.
அன்பைச் செலுத்துவதும், அன்பைத் தேடுவதும் உரிமையோ, தகுதியோ அல்ல. ஆனால் அன்பைத் தேடுவது வாழ்வில் செல்லுபடியாகும் விருப்பமாகும். அன்பு கிடைக்காதவர்கள் யார் தவறும் இல்லை. எல்லாம் சூழ்நிலைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக