திங்கள், 14 மே, 2018

மோடி அரசு விளம்பரத்துக்கு செலவு செய்த நமது வரிப்பணம் 4,300 கோடி !

- Swathi K : ஜூன் 2014 முதல் மார்ச் 2018 வரை மோடி அரசு விளம்பரத்துக்கு
செலவு செய்த நமது வரிப்பணம் 4,300 கோடி (430000000000 ரூபாய்). கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு 95 கோடி. மன்மோகன் அரசு 10 ஆண்டுகளில் 2,658 கோடிகள் செலவு செய்துள்ளது.. மன்மோகன் அரசு 10 ஆண்டுகளில் செய்த விளம்பர செலவை விட மோடியின் 3.8 ஆண்டு விளம்பர செலவு இரண்டு மடங்கு அதிகம்..
கழுதையை தினமும் குதிரையாக விற்க ஒரு நாளைக்கு நம்ம வரிப்பணம் 3.2 கோடிகள் செலவு செய்து இருக்கிறது இந்த அரசு.. இது போக கார்ப்பரேட் வேற வருடத்திற்க்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்கிறது மோடி என்ற சாதாரண மனிதனை ஹீரோ'வா மார்க்கெட் செய்ய.. சரக்கு இல்லாத தலைவரை தேர்வு செய்தால் இது தான் நடக்கும்.. இந்த உலகத்துலயே விளம்பரத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துற ஒரே பிரதமர் நம்ம பிரதமர் தான். விளம்பர கம்பெனிக்கு மட்டும் தான் லாபம். திட்டத்தை செயல்படுத்த ஆகும் செலவை விட.. அதை விளம்பரப்படுத்த அதிக செலவு செய்த ஒரே உலகத்தலைவர் மோடி தான்.. வாழ்க மோடி!! வாழ்க புதிய இந்தியா!!! https://www.ndtv.com/india-news/modi-government-splurges-over-rs-4-300-cr-in-publicity-rti-1851872

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக