திங்கள், 28 மே, 2018

1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து முடிவு

dinamalar: வெல்லிங்டன் : பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித எச்சுறுத்தலும் இல்லை என்றாலும், நியூசிலாந்தின் முக்கிய பொருளாதார தொழிலான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதிக்கும் என கருதப்படுகிறது.
இதனால் பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான பசுக்களுடன், ஆரோக்கியமாக உள்ள சில பசுக்களையும் கொல்ல நியூசி., அரசு முடிவு செய்துள்ளது.
பாக்டீரியா தாக்கப்பட்ட பசுக்களை கொன்று, எரித்து விடவும், பாக்டீரியா தாக்காத பசுக்களை மரங்களுக்கு உரமாகவும், உணவிற்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்று சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக