சனி, 28 ஏப்ரல், 2018

குஷ்பு : Yes ..I m Nakhat khan ... டுவீட்டரில் தனது பெயரை நக்கத் கான் என....


Devi Somasundaram : Yes ..I m Nakhat khan ..
குஷ்பூ தன் பேரை டிவிட்டர்ல நக்கத் கான்னு தன்னோட உண்மையான பேர்ல மாத்திட்டார் என்று செய்தி ...
வட மாநில ஊடகங்களில் விவாதத்திற்க்கு போகும் போது இந்து வேஷம் போட்டு ஏமாற்றி அரசியல் செய்கிறாய் என்று விமர்சிக்க பட்ட்தும்..இஸ்லாமியர்ன்னு சொல்லிக்க தைரியம் இல்லன்னு சொல்ல பட்டதும் மாற்றதிற்கான காரணமாய் இருக்க கூடும். வீரம் என்பது சுத்தி பத்து பேர்
பாதுகாப்புக்கு வச்சுகிட்டு சவடால் விடுவதில்லை. தனியா நிக்கிறேன் வந்து மோதி பார்னு கூவுறதில்ல. வீரம் என்பது மரணம் நிச்சயம் என்று தெரிந்தாலும் எதிரி எதை செய்யாதன்னு சொல்கிறானோ அதை செய்வது தான்.
ஒட்டரசியலுக்காக தன் பேரை சைமன் என்பதை மறைத்து கொள்வதை எல்லாம் வீரம்னு சொல்லிக்கிற இடத்துல இஸ்லாமியரா இருப்பது மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளான சூழல்ல ஆமா நான் முஸ்லிம் தான் என்று தன்னை ப்ரகன படுத்தி கொள்ளும் குஷ்பூ வின் துணிச்சல் இங்கு பல ஆண்களிடம் கிடையாது என்பதே உண்மை .

இந்த பேர் மாற்ற அரசியலை தேடி போனால் குஷ்பூ யாருக்கும் பயப்டாம தன் பேரை மாற்றினார் என்பது போல் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியளுக்கு பயந்து தன் இஸ்லாமிய பேரை திலிப் குமார்ன்னு மாற்றி கொண்டவர் முகம்மது யூசுப் கான் எனும் திலிப் குமார் .ஹிந்தி நடிகர் .மிகவும் மென்மையானவர் என்று சொல்லபடும் the first Khan in ஹிந்தி சினிமா இண்டஸ்டிரி..
இன்று கான் களால் நிரம்பி வழியும் ஹிந்தி சினிமா திலிப் குமாரை இஸ்லாமியர் என்பதால் வளர விடாமல் தடுத்தது. மிரட்டல் ,நெருக்குதலால் தன் பேரை திலிப் குமார் என்று மாற்றினார் .
இஸ்லாமியரா இருக்க பாதுகாப்பான சூழல் நிலவிய போது தன் பகுத்தறிவு கொள்கையை பேச இருந்த அதே துணிச்சல். தான் இஸ்லாமியர இருக்க பாதுகாப்பு இல்லாத சூழலில் ஆம் நான் இஸ்லாமியர் தான் என்றும் சொல்ல இருந்த போங்கடா டேய் என்ற தைரியம் குஷ்பூ வை இன்னும் அதிகமா நேசிக்க வைக்கிறது .
அவரது பகுத்தறிவு கொள்கையில் எப்பொழுதும் இருக்கும் நம்பிக்கை மீண்டும் நிருபணமாகிறது .. லவ் யூ டியர் குஷ்பூ . நீங்க யார்க்கு என்ன பேர்ல தெரிய பட்டாலும் எனக்கு குஷ்பூ தான்..
#whyilikekushboo .#kushboo #குஷ்பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக