புதன், 11 ஏப்ரல், 2018

NEET நுழைவு தேர்வு ,,, இனி அம்பானியின் தொழில்களில் ஒன்று ...

Anbu Mani : இன்று நுழைவுத் தேர்வு பயிற்சி நடுவங்கள் என்பது ஓராண்டுக்கு
ஒரு இலட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் பெரு வணிகக் களம். IIT jee தேர்வுகளைப் போலவே மருத்துவக் கல்வி க்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு NEET கொண்டு வந்தது தகுதியை திறமையை வளர்க்க அல்ல. பல்லாயிரம் கோடி பிஸினஸ் செய்வதற்குத் தான். அதிலும் கார்ப்பரேட்டுகள் கொழிப்பதற்குத் தான்.
உயர்கல்வியை முழுமையாக தனியார் மயமாக்குவது, அதற்கான நுழைவுத் தேர்வுகளை கார்ப்பரேட் மயமாக்குவது தான் புதிய கல்விக் கொள்கை.
ரிலையன்ஸ் ஃப்ரெஷ் இல் கீரைக்கட்டு விற்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சில்லறையாக இலாபம் சம்பாதிக்க முயலும் அம்பானிகள்
ஒரு மாணவனுக்கு ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் என வசூல் வேட்டை செய்ய வாகாக கிடைக்கும் கோச்சிங் சென்டர்களை விட்டு விடுவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக