வியாழன், 26 ஏப்ரல், 2018

IDBI வங்கியில் 600 கோடி மோசடி Aircell சிவசங்கரன் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

dinakaran: சென்னை: ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.600
கோடி மோசடி செய்த வழக்கில்
ஆக்‌ஷெல் சன்ஷைன் நிறுவனர் சிவசங்கரன் வீடு, அலுவலகங்களில் 8 மணி நேரமாக சிபிஐ சோதனை சோதனை வருகின்றனர். சிவசங்கரன் மீது குற்றச்சதி, மோசடி, ஊழல் ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். 50 இடங்களில் ரெய்டு
சிவசங்கரனுக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெல்காம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டில் பதிவான நிறுவனங்கள் :; பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் ஆக்‌ஷெல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் வின்விண்ட் ஒய் நிறுவனம் பின்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வின்விண்ட் நிறுவனம் காற்றாலை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இரு நிறுவனங்களும் 2014-ம் ஆண்டு ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.530 கோடி கடன் பெற்றுள்ளது. தற்போது வட்டியுடன் ரூ.600 கோடியாக பெருகிவிட்டது சிவசங்கரனின் கடன். />சிவசங்கரனிடம் விசாரணை< ரூ.600 கோடி மோசடி தொடர்பாக தொழிலதிபர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு

வங்கி மோசடி தொடர்பாக சன்ஷைன், வின்விண்ட் நிறுவன அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களை சேர்ந்த 24 அதிகாரிகள் மீது சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக