செவ்வாய், 24 ஏப்ரல், 2018

சி.பி.எம்–ன் பொலிட்பீரோவில் தலித்கள் புறக்கணிப்பு ?...

Raj Dev : பொலிட் பீரோவில் தலித்கள் இல்லாதது பற்றிய கேள்விக்கு ‘களத்தில் யில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் பொலிட் பீரோவில் இல்லாதது சற்று அதிர்ச்சியே! . பொலிட்பீரோ (பெட்ரோமேக்ஸ் விளக்கே) தான் வேண்டுமா என்று கேட்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற பல பொறுப்புகளில் ஒடுகப்பட்ட சாதியினர் இருக்கிறார்களே என்று வாதாடலாம். ஆனால் அந்த பொறுப்புகளின் தன்மை வித்தியாசமானவை. அவை கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புகள். ஆனால் பொலிட் பீரோ கட்டளைகள் பிறப்பிக்கும் இடம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி 24/7 போராட்ட வேலை திட்டத்தில் இயங்கும். எனவே இந்த கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புகள் போலீசுடன் சதா மோதலை கொண்டிருப்பவை. ஆனால் பொலிட்பீரோ அப்படியானதல்ல.
உதாரணத்துக்கு பிரகாஷ் காரட் அல்லது சீத்தாராம் யெச்சூரி போன்றோர் அன்றாடம் அனுபவிக்கும் போலீஸ் பிரச்சினை என்று எதுவுமிருக்காது. அதிகபட்சம் அவதூறு வழக்குகள் வரும். இந்த கட்டளையிடும் பொறுப்புகளை ஒரு சில சாதியினர் தொடர்ந்து தக்க வைத்து கொள்வதும், சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு அவை மறுக்கப்படுவதும் பற்றிய கேள்வியை எளிதில் புறந்தள்ள முடியாது.
தலித்களுக்காக...’ என்று (எல்லையில் ராணுவ வீரர்கள்... கணக்காக) பதிலளிக்க ஆரம்பிக்கிறார்கள் சி.பி.எம் தோழர்கள். தலித் மக்கள் சரீர ரீதியாக இன்னமும் ஒடுக்கப்படுகிறார்கள் என்றாலும் அந்த ஒடுக்குமுறைகளையும் மீறி கணிசமானவர்கள் படித்து மற்ற சாதியினருக்கு இணையாக முன்னேறி இருக்கின்றனர் என்பதும் உண்மை. அரசின் பல்வேறு துறைகளில் அவர்கள் தலைமை வகிக்கிறார்கள். முதலாளித்துவ நிறுவனங்களின் நிர்வாக இடங்களுக்கு கூட அவர்கள் வந்துள்ள நிலை
இரண்டாவது, படித்த தலித்களை அடையாள அரசியலை நோக்கி செலுத்துவதும் இந்த உயர்சாதி பொலிட்பீரோ மனநிலையின் ஒரு விளைவு எனலாம். சிறுபான்மை மதவாதம் ஆர்.எஸ்.எஸுக்கு இந்துக்களை நெட்டி தள்ளுவது போல சி.பி.எம்–ன் பொலிட்பீரோ படித்த தலித்களை அடையாள அரசியலுக்குள் தள்ளி விடுகிறது. சி.பி.எம் தோழர்களின் தூய அரசியல் நடத்தை இதற்கு பதிலாக தரப்படுகிறது. அரசியல் என்பது வறண்ட எதார்த்தமும், நிதர்சனமும் மட்டும் கொண்டதல்ல; கொஞ்சம் கற்பனை, உணர்வுக்காட்சி சார்ந்ததும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக