செவ்வாய், 10 ஏப்ரல், 2018

சேப்பாக்கம் மைதான முன்பாக மக்கள் போராட்டம் ,,, போலீசார் திகைப்பில் .

இடம் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் ஐ பி எல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானம் முன்பாக குவிந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் மைதானத்தை பூட்டு போட்டு மூடும் முயற்சியில் ,,, போலீசார் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் செல்வதை பார்த்து திகைத்து கூடுமானவரை அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி கொண்டிருக்கின்றனர் .
tamiloneindia :நெல்லையில் ரெய்னா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து!- தாக்குதல் நடந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல- வேல்முருகன்- வீடியோ சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வேல்முருகன் போராட்டம் நடத்தினார்.
பழ. நெடுமாறன் தொடக்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நாளை நடத்தப்படுகின்றன.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டிகளை பார்க்க சென்னையில் யாரும் போகாமல் இருந்து மைதானமே காலியாக இருப்பதன் மூலம் நம் பிரச்சினைகளை டிவியில் பார்க்கும் உலக நாடுகளுக்கு உணர்த்துவோம் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கூறி வந்தனர். இடம் ஐபிஎல் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் இடம் மாற்ற செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன. ஆனால் திட்டமிட்டபடி நாளை சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.




ஐபிஎல் என்பது சூதாட்டம்

அப்போது அவர் கூறுகையில் ஐபிஎல் என்பது ஒரு சூதாட்டம். அதை சென்னையில் நடத்த அனுமதிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஐபிஎல் கூடாது. நெல்லையில் நாளை என்எல்சியை முற்றுகையிடவுள்ளோம்.



பழ. நெடுமாறன் தொடக்கம்

அந்த என்.எல்.சி. முற்றுகைப் போரை பழ. நெடுமாறன் தொடங்கி வைக்கிறார். ஐபிஎல் போட்டியை நிறுத்தவும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் நடமாடும் ஐபிஎல் வீரர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல.



போட்டி வேண்டாம்

தமிழகத்தின் உணர்வை கிரிக்கெட் வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மீறி நடத்தினால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடத்தில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர்.



முதுகெலும்பில்லாதவர்கள்

ஈழ போரின்போது தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். அப்போது கபடி விளையாட்டு வீரர்கள் இலங்கையில் விளையாட இருந்தனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழக வீரர்கள் இலங்கை செல்ல கூடாது என்று வலியுறுத்தினேன். என் கோரிக்கையை உடனே ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அடுத்த விமானத்திலேயே இலங்கை சென்ற வீரர்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். அண்ணா, காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் அமர்ந்திருந்த அரியணையில் இன்று சூதாட்டத்தை கூட நிறுத்த முதுகெலும்பில்லாதவர்கள் அமர்ந்துள்ளனர் என்றார் வேல்முருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக