செவ்வாய், 3 ஏப்ரல், 2018

செம்பாக்கம் ஏரியும் காற்றும் அமெரிக்க கம்பனிக்கு தாரைவார்ப்பு! மலிவு விலையில் நல்ல காற்றை பெறலாமாம் ,, கம்பனி அறிவிப்பு

அமெரிக்க நிறுவனத்துக்கு செம்பாக்கம் ஏரி தாரைவார்ப்பு!மின்னம்பலம்: சென்னை செம்பாக்கம் ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணி அமெரிக்க நிறுவனத்திடம் அளிக்கப்பட்டு அங்கு வீசும் காற்றை விற்கவும் முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்
சென்னையில் செங்குன்றம், புழல், செம்பாக்கம், மதுராந்தகம், பூண்டி, சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் உள்ளன. இவற்றைத் தூய்மைப்படுத்தும் பணி அமெரிக்காவைச் சேர்ந்த கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணி செம்பாக்கம் ஏரியில் தொடங்கவுள்ளது. சென்னையைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனமான கேர் ஈர்த் டிரஸ்ட் நிறுவனமும் இதில் இணைந்து செயல்படவுள்ளது.
சென்னை சர்வதேச மையம் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்காவைச் சேர்ந்த நேச்சர் கண்செர்வன்சி (இயற்கை பாதுகாப்பு) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் டெர்செக், "சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தி இயற்கையை பாதுகாக்க 70 நாடுகளில் செயல்பட்டுவரும் எங்கள் நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பசுமையான உள்கட்டுமானம் அமைப்பதன் மூலம் மலிவான விலையில் ஆரோக்கியமான காற்றை மக்கள் சுவாசிக்க முடியும். மேலும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீமா பால், "சென்னை ஐஐடியைச் சேர்ந்த வல்லுநர்கள் ஏரியைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டு அதனைச் சீரமைக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பணி தற்போது எங்கள் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது. நீரில் உள்ள குப்பைகளை அகற்றும் இந்த முயற்சியில் உள்ளூர் நிறுவனமும் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இந்தப் பணி இன்னும் இரண்டரை ஆண்டுகளில் நிறைவடையும்" என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக