வியாழன், 12 ஏப்ரல், 2018

பாகிஸ்தான் பாடகி மேடையிலேயே சுட்டு கொலை ..


தினமலர் :இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண் பாடகி ஓருவர்
மேடையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கங்கா என்ற கிராமத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது சமீனா சாமன்,என்ற 22வயது இளம் பெண் பாடகி மேடையில் அமர்ந்தவாறே பாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஓருவர் பாடகியிடம் எழுந்து நின்று பாடுமாறு கூறினார். அதற்கு தாம் கர்ப்பிணியாக இருப்பதால் நிற்கமுடியாது என்றார். பின்னர் பாடகி மீது அந்த ரசிகர் திடீரென துப்பாக்கியால் சுட்டார்.இதில் மேடையில் மயங்கி விழுந்தார். இந்த காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. மருத்துவனை கொண்டு செல்லப்பட்ட பாடகி ஏற்கனவே இறந்துவுிட்டதாக டாக்கடர்கள் தெரிவித்தனர்.துப்பாக்கியால் சுட்ட நபர் தாரிக் அகமது என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸ் விசாரணை நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக