ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சசிகலா திமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம்? .. அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டால் ....

தினமலர் :'வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்தால்,
தி.மு.க.,வுடன் அ.ம.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்' என்ற ஆலோசனையை, தினகரனிடம், சசிகலா தெரிவித்துள்ளார். ஆனால், தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க, தினகரன் விரும்பவில்லை. அதனால், சென்னையில் நாளை நடக்கும், தி.மு.க., தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில், அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் சசிகலாவை, ம.தி.மு.க., பொது செயலர், வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், தா.பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர். நடராஜன் மறைவு தொடர்பாக, துக்கம்விசாரிக்க சென்ற அவர்கள், சசிகலா விடம், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேசியுள்ளனர். நேற்று முன்தினம் தஞ்சாவூரில், நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.< அதில், சட்டசபை காங்கிரஸ் தலைவர், கே.ஆர்.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள், நல்லகண்ணு, தா.பாண்டியன், உட்பட பலர் பங்கேற்று, சசிகலாவை புகழ்ந்தும்,தினகரனை பாராட்டியும் பேசியுள்ளனர்.அதே நிகழ்ச்சியில்,

சினிமா இயக்குனர், பாரதி ராஜா பேசுகையில், 'வரும் லோக்சபா தேர்தலில், அனைத்து எதிர்க் கட்சிகளும், ஒருங்கிணைந்து போராட வேண்டும்' என்றார்.

இந்நிகழ்ச்சி வாயிலாக, எதிர்க்கட்சிகளை தினகரன் ஒருங்கிணைத்துள்ள தகவல், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினுக்கு தெரிய வந்தது. உடனே அவர், காவிரி விவகாரத்தில், அனைத்து கட்சிகளின்கூட்டத்தை கூட்ட, திட்டமிட்டு உள்ளார்.இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறத்தில், சசிகலா, 'தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்' என்ற ஆலோசனையை, தினகரனுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு, தினகரன் தயக்கம் காட்டியுள்ளார். எனவே, தி.மு.க., நடத்தவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், தினகரன் பங்கேற்பாரா, புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அனுமதிக்கவில்லை


குடும்பத்தினரிடம், சசிகலா கூறியதாவது:காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த என் ஆதரவாளர் களை, கூட்டுறவு சங்கத் தேர்தலில், மனு தாக்கல் செய்ய, அ.தி.மு.க.,வினர் அனுமதிக்கவில்லை. மற்ற இடங்களில் மனு தாக்கல் செய்ய, ஆட்களும் இல்லை. நடராஜன் மறைவுக்கு, ஒரு அமைச்சர் கூட, அஞ்சலி செலுத்த வரவில்லை. இனி, அவர் களை நம்பி பயனில்லை.லோக்சபா தேர்தலில், பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுக்களை நாம் பிரித்தால், அது, அ.தி.மு.க.,வுக்கு தான் லாபம். 1998 லோக்சபா தேர்த லில்,அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது.

கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வி அடைந்தாலும், 35 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.தற்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்தால், அதே ஓட்டு சதவீதம் கிடைக்கும்.முக்குலத்தோர் சமுதாயம், முஸ்லிம் ஓட்டுக்கள், நமக்கு ஆதரவாக உள்ளன. அவற்றை பெற வேண்டும் எனில், தி.மு.க.,வுடன் கூட்டணி < அமைக்க வேண்டும்.அப்போது தான், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க முடியும்.

தி.மு.க., தயவு இருந்தால் தான், ஆட்சியை கவிழ்க்க முடியும். நடராஜன் உயிரோடு இருந்தபோது, 'ஆட்சியை கவிழ்க்க, நாங்கள் தயார்; ஸ்டாலின் தயாரா' என, துாது அனுப்பியதற்கு, ஸ்டாலினிடமிருந்து பதில் வரவில்லை.தற்போது, சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், நம்மிடம், 24 எம்.எல். ஏ.,க்கள் இல்லை.

எனவே, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தான், நம் அணிக்கு, லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்கும். மத்திய அரசின் வழக்குகளை, டில்லியில் சந்திக்க முடியும்.ஏற்கனவே, திவாகரனும், தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, விரும்புகிறார்.


தேசிய அளவில், மூன்றாவது அணியை ஏற்படுத்த, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, மாயாவதி, மம்தா விரும்புகின்றனர். எனவே, நாமும், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்.இவ்வாறு சசிகலா கூறியதாக, அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக