புதன், 11 ஏப்ரல், 2018

நடிகை ஸ்ரீ ரெட்டி ...வற்புறுத்தி நிர்வாண வீடியோ சாட்டிங்.. இந்தி நடிகைகள் அட்ஜஸ்ட் செய்வதால் எங்களுக்கு வாய்ப்புக்கள் தரப்படுவதில்லை

இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு: ஸ்ரீ ரெட்டிதினத்தந்தி: இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். ஐதராபாத் தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானபடுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையில், பேட்டி அளித்த ஸ்ரீ ரெட்டி கூறியதாவது:-

செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டூடியோக்கள் தான் பாதுகாப்பான இடங்கள். பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஸ்டூடியோக்களை பிராத்தல்கள் போன்று பயன்படுத்துகிறார்கள்.

ஸ்டூடியோக்கள் சிவப்பு விளக்கு பகுதி போன்று உள்ளன. ஸ்டூடியோக்களுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அது பாதுகாப்பான இடம். மேலும் போலீசாரும் சோதனை செய்ய மாட்டார்கள். அரசும் இதை கண்டுகொள்ளாது.

வட நாட்டில் இருந்து வரும் நடிகைகள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதால் தெலுங்கு பேசும் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஏன் என்றால் தெலுங்கு பேசும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்வது இல்லை. என்ன காரணத்திற்காக எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தடை விதிக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஒரு பெண்ணாக எனது கருத்தை சுதந்திரமாக கூற உரிமை இருக்கிறது. தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். யாருக்கும் நான் பயப்படமாட்டேன்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன், என்னிடம் ஆதாரம் உள்ளது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக