செவ்வாய், 10 ஏப்ரல், 2018

விவசாய சங்கங்களின் தவறான அரசியல் வரலாறு ... பொன்னியின் செல்விக்கு புகழாரம்..

Sowmian Vaidyanathan : ஊரறிந்த விவசாய சங்கத் தலைவரான பி.ஆர். பாண்டியன்
பாஜகவின் கே டி ராகவனை வயிற்றெரிச்சலோடும், மிகுந்த மனக் கொதிப்போடும், பொங்கி எழுந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் போட்டு தாக்கிக் கொண்டிருக்கின்றார்...!
ஆனால் துரதிருஷ்டவசமாக, தமிழக விவசாயிகளுக்காக இலவச மின்சாரம் தந்து, மூன்று தடவை கிட்டத்தட்ட 20ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, தான் பங்குபெற்ற மத்திய வி.பி.சிங் அமைச்சரவை அதிகாரத்தைப் பயன்படுத்தி காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து, படிப்படியாக அதன் இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்து, இன்றைக்கு அதை அமல்படுத்த மறுக்கும் மத்திய மோடி அரசுக்கு எதிராக பதினைந்து நாட்களாக தொடர் போராட்டங்களையும், நடைபயணத்தையும் மேற்கொண்டு மக்கள் எழுச்சியை திரட்டிக் கொண்டும் இருக்கின்ற...
திமுகழகத்தை, இந்த தமிழக விவசாய சங்கங்கள், காலம் காலமாக கருவறுக்கத் துடிக்கும் அதிமுக மற்றும் பாஜக சார்பு கட்சிகளோடு இணைந்து கரித்துக் கொட்டியும், ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசி பொன்னியின் செல்வி பட்டமெல்லாம் கொடுத்தும் சிலாகித்தும் வந்த நிலையில்....

இன்றைக்கு பொது ஊடகத்தில் வயிறு எரிந்து பாஜக பிரதிநிதியை திட்டித் தீர்க்கும் நிலை வந்திருப்பது.....
தமிழக விவசாயிகள் இத்தனைக் காலமும் தேர்தல் அரசியலில் எடுத்த தவறான முடிவுகளின் வினையே என்பது தான் இங்கே நாம் உணர வேண்டியது...!
அதே சமயம் அனைத்து தமிழக விவசாயிகளும் காரி உமிழ்ந்து கழுவி சுத்தம் செய்ய வேண்டிய கட்சி பாஜகவும், அதிமுகவும் என்பதை இதன் பிறகாவது உணர்ந்தால் தான் தமிழகம் தப்பிப் பிழைக்கும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக