செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பாஜகவுக்கு முட்டு கொடுக்கும் விஜயகாந்தின் கபட அரசியல் ...

Adv Manoj Liyonzon :  நமது அரசியல்வாதிகள் எத்தகைய தற்குறிகளாக
உள்ளார்கள் என்பதற்கு விஜயகாந்தின் சமீபத்திய அறிக்கையே சிறந்த உதாரணம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியது மத்தியில் ஆளும் பாஜக அரசின் பொறுப்பு.
ஆனால் கர்நாடக மாநில அரசின் முதல்வர் சித்தராமைய்யாவுக்கு அழுத்தம் கொடுத்தால் வாரியம் அமைந்துவிடும் என்கிறார் காவிரி வழக்கு, காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றின் சாராம்சம் புரியாமல்
மேலும் இது பாஜகவின் துரோகத்தை மறைக்க காங்கிரஸ் திமுக மீது திசை திருப்பும் வெறுப்பரசியலாகும். இது விஜயகாந்த் பாஜகவுக்கு செய்யும் மறைமுக உதவி.
சரி, விஜயகாந்த்தின் கூற்றில் நியாயம் உள்ளது என்றால், வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்காத குறையாக விஜயகாந்த்தின் கண்ணத்தை பெருங்காதலோடு தடவிய நரேந்திர மோடிக்கு, அதே உரிமையோடு விஜயகாந்த் அழுத்தம் கொடுத்தால் மோடி வாரியத்தை அமைத்திடுவார் தானே. நடக்குமா.!?

விஜயகாந்த் போன்ற அரசியல் தற்குறிகளைத்தான், நமக்காக சட்டமன்றத்தில் போராடும் எதிர்க்கட்சி தலைவராக வர வழிவகை செய்தோம்
அதுமட்டுமின்றி பாஜகவை பகைத்துக் கொள்ள விரும்பாத விஜயகாந்தின் பித்தலாட்டம் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்
சரி விடுங்க... எதுக்கு செத்த பாம்பை அடிச்சிக்கிட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக