செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பாரத் பந்த்திற்கு தலைமை வகித்த தலித் தலைவர் கொலை ... யோகி அரசின் காட்டு ராஜ்ஜியம்


Chinniah Kasi லக்னோ,: தலித் அமைப்புகள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்துக்கு
தலைமை வகித்த இளைஞரை வன்முறையாளர் என முத்திரை குத்தி கொலைப்பட்டியல் வெளி யிட்ட சங்பரிவார் அமைப்பினர், அதன்படியே கொலை செய்து விட்டனர். உத்தரப்பிரதேசம் மீரட்டுக்கு அருகில் உள்ள சோபாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் தலித் தலைவர் கோபி பரூயான் (28). அண்மையில் தலித் அமைப்புகள் நடத்திய பாரத் பந்தில் முன்னணியில் நின்று செயல்பட்டுள்ளார். சங்பரிவார் அமைப்பினர் அவரை வன்முறையாளர் என குறிப்பிட்டு முதல் நபராக கொலைப்பட்டியல் (ஹிட் லிஸ்ட்) வெளியிட்டிருந்தனர். அதன்படி அவரை சுட்டுக் கொன்றனர். ஏப்ரல் 14 அன்று தலித் அமைப்புகள் நடத்த திட்டமிட்டுள்ள அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை சீர்குலைக்கும்நோக்கத்துடன் இந்த கொலைபாதகம் நிகழ்த்தப்பட்டி ருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. என்ன நடந்தாலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெறும் எனவும், அச்சுறுத்தல்களுக்கு தலித்துகள் அடிபணிய மாட்டார்கள் எனவும் மீரட்டில் நடந்த தலித் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர். ஏற்கெனவே கோபி பரூயாவை வன்முறையாளர் என குற்றம்சாட்டி சங்பரிவார் வெளியிட்ட கொலைப் பட்டியல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த பட்டியலை இணைத்து காவல்துறையில் கிராம மக்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கோபி பரூயான் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு மேலும் தங்களது கிராமத்தின் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துவார்கள் என தலித் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக