ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஸ்டாலின், வீரமணி , திருநாவுகசர், திருமாவளவன், துரைமுருகன் .... கைது செய்து பின்னர் விடுதலை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவரை போராட்டம் தொடரும் என்று தலைவரகள் அறிவிப்பு
ஸ்டாலின் விகடன் =சுகன்யா பழனிச்சாமி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து,  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டம்காவிரி நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்.,16ம் தேதி அன்று மத்திய அரசு 6 வாரகாலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழக சட்டமன்றத்திலும், அனைத்துக்கட்சி கூட்டத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியமாக இருந்துவந்த நிலையில், மத்திய அரசு மீது  தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று, தீர்ப்பில் குறிப்பிட்ட 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

போராட்டம்
அரசும் மத்திய அரசின் நிலைப்பாட்டை மறைமுகமாக எதிர்த்து வருகின்றது. மேலும், தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தை, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசின் மீதும் மத்திய அரசின் மீதும் தங்களின் எதிர்ப்புக்களை நேரடியாகத் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க போராட்டம்இந்தச் சூழலில், தி.மு.க காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசனை நடத்த இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது. இதில், மத்திய மற்றும் மாநில அரசை எதிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்கள் திடீரென சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மட்டுமல்லாமல், நெல்லை, தஞ்சாவூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் தி.மு.க-வினர் சாலைமறியலில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். சென்னையில், போராட்டம் நடைபெற்ற இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு, சாலைமறியல் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஸ்டாலின், துரைமுருகன், திருநாவுகசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களையும் கைது செய்த போலீஸார், பின்னர் அவர்களை விடுதலை செய்தனர். காவிரி மேலாண்மைக்காக தி.மு.க-வின் போராட்டம் சூடுபிடித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக