ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மன்னார்குடியில் அம்மா அணி அலுவலகம்; திவாகரன் திறப்பு

மன்னார்குடியில் அம்மா அணி அலுவலகம்; திவாகரன் திறப்புதினத்தந்தி :திருவாரூரின் மன்னார்குடியில் அம்மா அணி அலுவலகத்தினை திவாகரன் திறந்து வைத்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் புதிய கட்சி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், தினகரனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து திவாகரன் தனியாக அணியை தொடங்கி உள்ளார். . அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது,
அம்மா அணிக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அணியில் இணைய யாருக்கும் அழைப்பு விடமாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள். தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் அளித்துள்ளேன். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி தொடங்கியபொழுது என்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை தந்தார் என கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயல்பட விருப்பம் இல்லாத நிலையில் அம்மா அணி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக