ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

புத்த பெருமானின் புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாணம் வருகிறது .. 29, 30, 01 ஆம் திகதிகளில் வீரசிங்கம் மண்டபத்தில்

தினக்குரல் :புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள்
யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி தலதா மாளிகையில் புத்த பகவானின் புனித தாதுப் பொருள்களில் ஒன்றான புனித பல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தலதா மாளிகை மிகுந்த உயர்ந்த சிறப்பு பெற்று விளங்குகின்றது. அத்துடன் கண்டி மாவட்டமும் வனப்பும், செழிப்பும் நிறைந்ததாகக் காணப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மண் வனப்பும், செழிப்பும் நிறைய பெற்று மிளிர வேண்டும், யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை செழுமையும், செம்மையும் பெற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக புத்த பகவானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்களை யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வந்து யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கின்றோம். இவை எதிர்வரும் 29, 30, 01 ஆம் திகதிகளில் வீரசிங்கம் மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக