சனி, 7 ஏப்ரல், 2018

ராஜபாளையம் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் உயிரிழந்தனர்

Accident near Rajapalayam kills 7 Kalai Mathi- Oneindia Tamil விருதுநகர்: ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
கார்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சங்கனகொடா என்பர் தனது கும்பத்தினருடன் சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சி மாவட்டம் கள்ளிக்குறிச்சியில் இருந்து தென்காசி நோக்கி சீனி லோடு ஏற்றி வந்த லாரி தேவதானம் விதைப்பண்ணை அருகே சங்கனகொடாவின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில சம்பவ இடத்திலேயே சிறுமி உள்பட ஏழு பேர் பலியாயினர். ஆபத்தான நிலையில் இருவர் மதுரை அரசு மருத்துவமணையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து நடத்த இடத்தில் மாவட்ட காவல் துணைக்கண் காணிப்பாளர் ராஜராஜன் நேரில் விசாரணைநடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக