வியாழன், 12 ஏப்ரல், 2018

பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ரூ.650 கோடி கொள்ளை ...

Special Correspondent FB Wing : மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்
இயக்குநராக இருந்த ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் ரூ. 650 கோடி அளவிற்கு கடன்கொடுத்திருப்பதும், அந்த கடன்தொகையை ‘ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம்’ இப்போது வரை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது
.வங்கிகள் கோடிக் கணக்கில் கடன் அளித்ததற்கும், அக்கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கும் ஷிர்தி நிறுவனத்திற்கு, பியூஷ் கோயலுடன் இருக்கும் நெருக்கமே காரணம்என்பதுடன், ஷிர்தி
நிறுவனத்திடமிருந்து, கோயலின் மனைவி 1 கோடியே 59 லட்சம் பண ஆதாயம்அடைந்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது
.புதுதில்லியிலிருந்து வெளியாகும் ‘தி ஒயர்’ இணைய இதழ்,இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் தகடுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநராக இன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2010 ஜூலை வரை இருந்து வந்தார்.
அந்த சமயத்தில் அந்நிறுவனம் பொதுத்துறை வங்கிகள் பலவற்றிடமிருந்து 650 கோடி ரூபாய்அளவிற்குக் கடன்கள் பெற்றுள் ளது. ஆனால் அவற்றை அது திருப்பிச் செலுத்தவில்லை.
ஷிர்தி நிறுவனமானது, பியூஷ் கோயல் அதன் தலைவராக இருந்தகாலத்திலிருந்தே வாங்கிய கடன் களைத் திருப்பிச் செலுத்தாமல் தாமதப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டது.

இந்நிறுவனம் யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி என ஏராளமான வங்கிகளில் பல நூறுகோடிகளை கடன் வாங்கியுள்ளது.
பியூஷ் கோயல் இதற்கு முன்புஅரசாங்கத்தின் இரு வங்கிகளுக்கு அரசின் பிரதிநிதியாக இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார். ஒன்று, பரோடா வங்கி. இதில் அவர் வாஜ்பாயி தலைமையிலிருந்த தேசியஜனநாயக கூட்டணி அரசாங் கத்தின் போதும், பின்னர் 2004-2008-இல் மன்மோகன்சிங் அரசாங்கத்தின் போது பாரத ஸ்டேட் வங்கியிலும் இருந்திருக்கிறார்.
2008-இல்தான் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வெளியேறிய பிறகு, ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநராகவும் கோயல் மாறியிருக்கிறார்.
2010-இல் கோயல், பாஜகவின்பொருளாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்படுகிறார். பின்னர் அதே ஆண்டில் அவர் நாடாளுமன்ற நிதிக் குழுவிற்கும் (parliamentary committee of finance)நியமிக்கப்படுகிறார். இந்தக் குழுதான்வங்கிகள் உட்பட நிதிநிறுவனங்களின் செயல்பாடுகளை மேற் பார்வை பார்த்திடும் குழுவாகும்.
எனவே, கோயலின் செல்வாக்குபேரிலேயே ஷிர்தி நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அளவிற்கு வங்கிக் கடன்கள் கிடத்துள்ளன.ஆனால், ஷிர்தி நிறுவனத்தின் துவக்காளரான (பிரமோட்டர்) ராகேஷ் அகர்வால் இதனை மறுத்துள்ளார். “பியூஷ் கோயல் 1994-ஆம்ஆண்டிலிருந்தே என் நெருங்கிய நண்பர்; அவரின் குடும்பத்தினரும் மிகவும் நெருக்கம்; இருந்தாலும் எவ்விதமான பயனையும் பெறுவதற்கு நான் அத்தகைய நட்பைப் பயன்படுத்திக் கொண்டதில்லை” என்று ‘தி வயர்’ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்திற்கு பியூஷ் கோயல், 2008 ஏப்ரலிலிருந்து 2010 ஜூலை வரை இயக்குநராக இருந்தார் என்பது அந்நிறுவனங்கள் சார்பாக அரசாங்கத்தின் ‘ரிஜிஸ்ட்ட்ரார் ஆப் கம்பெனிஸ்’க்கு அளித்துள்ள அறிக்கைகளிலிருந்து தெரியவருகிறது
. 2009 செப்டம்பர் 30 வரை பியூஷ்கோயல் அதன் முழுநேர இயக்குநராக இருந்திருக்கிறார். பின்னர் தான் ராஜினாமா செய்துள்ளார்.
எனினும் செயல்படா இயக்குநராக தொடர்ந்துஇருந்து வந்திருக்கிறார்
.ராகேஷ் அகர்வால் கூறுவதே உண்மை என்று வைத்துக் கொண்டாலும், வேறு சில கேள்விகளுக்கு அவரிடம் பதில் இருப்பதாக தெரியவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஷிர்தி’ நிறுவனம் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகைகள் எதையும் செலுத்தாமல் உள்ளது.
பிராவிடண்ட் பண்ட் ரூ. 4 கோடி உட்பட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி, எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் மற்றும் அரசாங்க வரிகளையும் கட்டவில்லை.
ஆனால், அதே காலக்கட்டத் தில், ஷிர்தி நிறுவனம் பியூஷ் கோயலின் மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமான ‘இண்டர்கான் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு எவ்விதப் பாதுகாப்புப் பத்திரங்களையும் பெறாமல் 1.59 கோடி ரூபாய் கடனாகக் கொடுக்கிறது ..
கோயல் செய்தஉதவிக்காக, அவரது மனைவியும்,மகனும் ஷிர்தி நிறுவனத்திடமிருந்து பண ஆதாயம் பெற்றார்கள் என்பது இதனால் ம்பலமாகி இருக்கிறது.
ஆனால், இந்தக் கடன் மேற்படி‘இண்டர்கான் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்னும் நிறுவனத்திற்கு நட்பின் அடையாளமாகக் கொடுக்கப்பட்டதாக ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் உரிமையாளர்கள் ‘தி ஒயர்’ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்
தன்னுடைய நிறுவனம் அரசாங்கத்தின் வங்கிகளுக்குக் கடன்தொகைகளைத் திருப்பிச் செலுத்தாததற்கும், பியூஷ் கோயலின் மனைவிக்கும் மகனுக்கும் சொந்தமுள்ள நிறுவனம், தங்கள்நிறுவனத்திற்குக் கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்தாததற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று அகர்வால் மறுக்கிறார்
.கம்பெனியின் பதிவுருக்களைப் பரிசீலிக்கும்போது, பியூஷ் கோயலும், அவர் மனைவி சீமா கோயலும் 2009 பிப்ரவரியிலிருந்து 2013டிசம்பர் வரை ‘சஜால் ஃபைனான்ஸ்’ மற்றும் ‘இன்வெஸ்ட்மெண் ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்னும்கம்பெனியின் இயக்குநர்களாக இருந்தார்கள் என்பது தெரியவருகிறது
இவர்களுக்குப் பின்னர் இவற்றின் நிறுவனர்களாக கௌரவ் ராகேஷ் அகர்வால் மற்றும் அமீத் முகேஷ் பன்சால் வந்தார்கள். கௌரவ் ராகேஷ் அகர்வால் என்பவர் ராகேஷ் அகர்வாலின் மகன்.இந்த அகர்வால், 2011 ஆகஸ்ட்டிலிருந்து 2013 ஏப்ரல் வரைபிரதீப் மெட்டல்ஸ் என்னும் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருந்தார் என்பதும், பிரதீப் மெட்டல்ஸ் நிறுவனம், பியூஷ் கோயலின் சகோதரர் பிரதீப் கோயலால் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், “பிரதீப்பும் என் நெருங்கிய நண்பர்தான்; நான் என்னுடைய சொந்த பிசினசில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அதிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்” என்று அகர்வால் கூறுகிறார்.எந்த வகையில் பார்த்தாலும் ஷிர்தி நிறுவனத்துடன், பியூஸ் கோயல் குடும்பத்திற்கு இருக்கும் நெருக்கத்தை மறைக்க முடியாது என்பதுதான் உண்மை
.எனவே, பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த நிறுவனம் 650 கோடிரூபாயை அரசாங்கத்தின் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாது இருப்பது தொடர்பாகவும், கோயலின் மனைவிக்கு அந்த நிறுவனம் அளித்துள்ள கடன் தொகை சம்பந்தமாகவும், பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்திட வேண்டும் என்றும் அமைச்சர் பொறுப்பிலிருந்து பியூஷ் கோயல் அகற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இப்பிரச்சனையை பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் எழுப்பியுள்ளார். எற்கனவே 36000 கோடி பாதுகாப்பு ஊழல்களில் சிக்கி தவிக்கும் மோடிக்கு இது மேலும் சிக்கலை கொடுத்து உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக