வியாழன், 12 ஏப்ரல், 2018

பணமதிப்பு இழப்பு.. 16000 மடங்கு சொத்து குவிப்பு .. அமித் ஷா மகன் ஜெய் ஷா- ! பா.ஜ.கவின் சொத்தும் குவிந்தது!


ஆனந்தன் கணேசன் :: பணமதிப்பு இழப்ப நடவடிக்கை -பாஜ.க வருமானம்
குவிந்தது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் சீரழிந்தது. சிறு-குறு தொழில்கள் நசிந்தன.
ஆனால், இந்த பணமதிப்பு இழப்பு காலத்திலும் 16000 மடங்கு வருமானத்தை பெருக்கிய  ]
ஒரே நபர் ஜெய் ஷா- ஒரே அமைப்பு பா.ஜ.க.

பாஜகவின் வருவாய் 2016-17ஆம் நிதியாண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 81.18% உயர்ந்து 1034 கோடியாகியுள்ளது.
2015-16ஆம் நிதியாண்டில் பா.ஜ.க. வருமானம் 570.86 கோடி ரூபாயாகும்.
அதே ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 14%வீழ்ச்சியடைந்து 225.36கோடியானது. இது அதற்கு முந்தைய ஆண்டு வருமானத்தை விட 32 கோடிரூபாய் குறைவு.
தனக்கு வந்த வருவாய் டொனேஷன் மற்றும் கான்ட்ரிபியூஷன்(என்ன வித்தியாசம்?) பா.ஜ.க.வும் காங்கிரசும் தெரிவித்துள்ளன.
வரவு-செலவு அறிக்கையை சமர்பிக்க கடைசி நாள் 30.10.2017. ஆனால் பா.ஜ.க. கணக்கு சமர்பித்தது பிப் 2018ல். காங்கிரசோ மார்ச் 2018ல்தான் கணக்கு சமர்பித்தது.

ஓராண்டில் 463 கோடி அதிக லாபம் என்றால், நாட்டில் தொழிற்சாலைகளே தேவையில்லை.
கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து விட்டால் பிறக மைதாஸ்தான் என்பதை பா.ஜ.க. நிருபித்துள்ளது.
---- ஆதாரம் பைனான்ஷியல் எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக