திங்கள், 16 ஏப்ரல், 2018

ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் : ஆந்திர சினிமா வி ஐ பிக்கள் நூற்றுகணக்கான 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட படுக்கைக்கு ...விடியோ .

ஹைதராபாத்: பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நூற்றுக்கணக்கான பெண்களை படுக்கைக்கு வரவழைத்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரிடம் சமாதானம் பேசி அவரை அமைதியாக இருக்க வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளது.
 இந்நிலையில் புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. Buy Tickets நடிகைகள் இந்த எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் வக்கட அப்பா ராவ் 16 வயது சிறுமிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண் கலைஞர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. 
ராணாவின் தம்பி அபிராம் டகுபாட்டி, எழுத்தாளர் கோனா வெங்கட், இயக்குனர் கொரடலா சிவா, நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா உள்ளிட்டோரின் பெயர்களை ஸ்ரீலீக்ஸின் ஒரு பகுதியாக வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.
உண்மை டிவி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டி அப்பாராவ் பற்றி பேசினார். இதையடுத்து அப்பாராவுக்கு எதிராக பல பெண் கலைஞர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஸ்ரேயா, ஸ்ரீவாணி, ஸ்ரீதேவி ஆகியோர் டிவி சேனலுக்கு போன் செய்து அப்பாராவ் தங்களிடம் தவறாக நடந்ததாக தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் தயாரிப்பாளர் தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ராவ் தன்னை ஒரு இரவு முழுவதும் பயன்படுத்திக் கொண்டதாக ஹேமா என்பவர் தெரிவித்துள்ளார். 
அதே டிவி சேனலுக்கு போன் செய்த அப்பா ராவ் அந்த பெண்கள் அனைவரும் கூறியதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ ரெட்டி தன்னை பற்றி தவறான தகவலை தெரிவித்துள்ளதாக அப்பா ராவ் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக