திங்கள், 16 ஏப்ரல், 2018

தென் மாநிலங்களிடம் இருந்து வரி வருவாயை பறித்து வடமாநிலங்களுக்கு கொடுக்கும் .. 15 வது நிதிக்குழு ..


தக்ஷிணாமுர்த்தி : மத்திய அரசு வரி வருவாய்களை மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளும் அளவு  இதுவரை 1971 ஆண்டு கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின் அடிப்படையிலே இடம் பெற்றது .
ஆனால் தற்போது 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட மக்கள் தொகை கணக்கின் படி மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பகிர்வு செய்ய மோடி அரசு முடிவெடுத்து உள்ளது.
இந்த இடைப்பட்ட காலங்களில் தென் மாநிலங்களின் மக்கள் தொகை கணிசமாக குறைந்து உள்ளது,
ஒழுங்காக குடும்ப கட்டுப்பட்டு திட்டத்தை அமுல் படுத்தியதும். கல்வி பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் இதற்கு  காரணமாக உள்ளது.
ஆனால் வடஇந்திய மாநிலங்கள் , குறிப்பாக்க பிகார் உத்தர பிரேதேசம் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் போன்றவரை ஜனத்தொகையை எக்கச்சக்கமாக பெருக்கி விட்டன,
இதற்கு குடும்பக்கட்டுப்பாடு ஒழுங்காக கடைப்பிடிக்காமை கல்வியில் பின்தங்கியது போன்ற பல காரணங்கள் கூறப்பட்டாலும் , இந்திமொழி பேசும் மக்கள் தொகை அதிகரிக்கவேண்டும் என்ற இந்தி மேலாதிக்க எண்ணமும் மிக முக்கியமான காரணமாகும்.
இதை பற்றி பலரும் பேச தயங்கினாலும் இதுதான் முக்கியமான உண்மையாகும் . ஆர் எஸ் எஸ் போன்ற அடிப்படை வாத சிந்தனை வடஇந்திய அதிகார வர்க்கத்திடம் ஆழமாக உள்ளது . அவரகளின் சிந்தனை இதுதான் .
 வடஇந்திய ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள்  தென் மாநிலங்களுக்கு எதிராக கக்கும் விஷ பிரசாரங்களை அவதானிக்கும் பொழுது அவர்கள்  தென்மாநிலங்களை முற்று முழுதாக  எதிரி நாடுகளாகத்தான் நோக்குகிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது


இப்போது மத்திய அரசு வரி வருவாய்க்கு  கேரளா கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு பதிலாக இருபத்தி ஐந்து சதம்தான் அவர்களுக்கு கிடைக்கிறது.
தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு பதிலாக நாற்பத்தி ஐந்து சத்தம்தான் கிடைக்கிறது . இப்படித்தான் ஆந்திரா , தெலுங்கான .கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் குறைவாக கிடைக்கிறது.
ஆனால் பிகார் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பதிலாக அவர்களுக்கு ஒரு ரூபாய் எழுபது சதம் கிடைக்கிறது . இப்படியே உத்தர பிரேதேசம் , மத்திய பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிகமாக கிடைக்கிறது .
சுருக்கமாக கூறுவதென்றால் .தென்மாநிலங்களிடம் இருந்து பணத்தை பறித்து வடமாநிலங்களுக்கு கொடுக்கிறார்கள்
தென்மாநிலங்கள் ஒரு காலனி பிரதேசமாக ஆகி விட்டது.
இந்த நிதி சுரண்டலை விட மோசமான ஒரு ஆபத்து 2026 ஆண்டு வர இருக்கிறது.
புதிய ஜன தொகை அடிப்படையில் நாடளுமன்ற உறுப்பினர் தொகையையும் மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்த முயற்சி முன்பு வாஜ்பாய் அரசின் காலத்தில் ஏற்பட்ட பொழுது பேச்சு வார்த்தை மூலம் அது தடுக்கப்பட்டது . அப்போது  2026 ஆம் ஆண்டில் தொகுதி மீள் பரிசீலனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது/
இதன் படி பார்த்தால் தமிழகத்துக்கும் இதர தென்மாநிலங்களுக்கு  பல எம்பி தொகுதிகள் காணமல் போகும். தென்மாநிலங்களின் அரசியல் பலமும் குறைந்து போகும். 
ஆனால் வடமாநிலங்களுக்கு புதிதாக பல தொகுதிகள் உருவாகும்.
அப்பொழுது அவர்களின் அரசியல் பலமும் பெருகும் .
இதை தடுப்பதற்கு என்ன வழி ?

ஒரே வழி அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். . தென்மாநிலங்களுக்கு தனியான ஒரு அரசியல் அந்தஸ்த்தை உறுதி செய்யக்கூடிய ஒரு அமைப்பு உருவாக வேண்டும்.
தென் மாநிலங்களின் கூட்டமைப்பு ( Uniated States of South India)  உருவாகி தென்மாநிலங்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக