திங்கள், 26 மார்ச், 2018

இதுதான் தமிழ்நாடு! இதுதான் திமுக! இதுதான் ஸ்டாலின் !

Sivasankaran Saravanan : திமுக சார்பாக தமிழ்நாடு தோறும் ஏரிகள் மற்றும்
கோயில் குளங்கள் தூர்வாரப்பட்டது! இது கட்சியின் பொதுக்குழு செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல! ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு!
ஸ்டாலின் பதவி பெறுவதற்காக வேண்டி கோயில் குளங்களை தூர்வாரி பரிகாரம் தேடுகிறார் என அப்போது கிண்டல் அடித்தார்கள்! சில பெரியாரியவாதிகளுமே கூட இதை கேலி செய்தார்கள்! ஸ்டாலின் அவற்றை பொருட்படுத்தவில்லை!
ராக்கெட் ரதத்தை எதிர்த்தபோது அதே ஸ்டாலினை இந்து மத எதிர்ப்பாளர் என்றார்கள். இதையும் அவர் பொருட்படுத்தவில்லை!
அது எப்படி கோயில் குளத்தை தூர்வாறும்போது பரிகாரம் தேடுபவராகவும், ரதத்தை எதிர்த்தால் உடனே இந்து எதிர்ப்பாளராகவும் மாறிவிடுவார் என்று தெரியவில்லை!
"ஸ்டாலின் மனைவி கோயில் கோயிலாக போய் பூஜை செய்கிறார் பாருங்கள்! " என பலரும் கேலி செய்தால் கூட, எங்கே தன்னுடைய இமேஜ் குறைந்துவிடுமோ என அதை அவர் தடுத்து நிறுத்தவுமில்லை!
தனது மனைவியிடமே எதையும் திணிக்காதவர், அதேவேளை ஹிந்துத்துவா மதவாதம் இந்த மண்ணில் ஒற்றுமையான தமிழர்களிடையே அமைதியை குலைக்க நினைத்தால் அதையும் முளையிலேயே கிள்ளி எறிய முயல்பவர் என்ற இருவிதமான செயல்பாடுகள் மூலம் அவருக்கு மதங்களைக் கடந்த ஒரு தலைவர் என்ற இமேஜையே இது தந்திருக்கிறது..!
ராக்கெட் ரத யாத்திரைக்கு எதிராக திமுக மகளிரணி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், மஞ்சள் குங்குமம் தாலி அணிந்து ரதயாத்திரைக்கு எதிராக போராடிய புகைப்படம் வட இந்திய ஆட்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது!
உண்மையில் சொல்லப்போனால் இதுதான் தமிழ்நாடு!
வாரம் தோறும் விரதம் இருந்து வருடத்துக்கு ஒருமுறை வேண்டிய சாமிக்கு மாலை போட்டு கோயில், கும்பாபிஷேகம் என்று மிகுந்த பக்தியில் திளைப்பார்கள் பெரும்பாலான மக்கள்! அவர்களிடம் சென்று, "இந்து சொந்தங்களே! மசூதியை இடிக்க ஆதரவு தாரீர்! " எனக்கேட்டால் செருப்பைக் கழட்டி அடிப்பார்கள்..!
ஆகவே ஆர்எஸ்எஸ் சங்கிகள் "ஆபரேஷன் திராவிடம் " திட்டத்தில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் என்ன முக்கு முக்கினாலும் ஒன்றும் வேலைக்கு ஆகப்போவதில்லை!
சங்கிகள் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களாக இருக்கலாம்!
 மற்ற மாநிலங்களில் எல்லா பந்துகளையும் கோலாக மாற்றக்கூடிய திறமை பெற்றவர்களாக இருக்கலாம்! ஆனால் பாருங்க, தமிழ்நாடு ஒரு கிரிக்கெட் கிரவுண்ட்! இங்க வந்து புட் பால் ஆட நெனச்சா உங்களுக்கு கிரிக்கெட் கார்க் பால் தான் கிடைக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக