திங்கள், 12 மார்ச், 2018

லண்டனில் சத்யராஜ் சிலை!

லண்டனில் சத்யராஜ் சிலை!மின்னம்பலம் :லண்டனில் உள்ள ‘மேடம் துஸாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் மெழுகுச் சிலை வைக்கப்படவுள்ளது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் வசூல் சாதனை புரிந்தது பாகுபலி திரைப்படம். வரலாற்றுச் சம்பவங்களை உள்வாங்கி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்குகள், கிராபிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவை மட்டும் படத்திற்கான வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிடவில்லை. கதாபாத்திர உருவாக்கமும், நடிகர்களின் சிறந்த நடிப்பும் படம் பற்றிய நம்பகத்தன்மையை அதிகரித்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியக்கூடிய அளவில் அமைந்திருந்தது. கதாநாயகன், கதாநாயகி கதாபாத்திரத்திற்கு இணையாக பேசப்பட்டது சத்யராஜ் ஏற்று நடித்திருந்த கட்டப்பா கதாபாத்திரம்.

லண்டனில் உள்ள ‘மேடம் துஸாட்ஸ்’ அருங்காட்சியகம், பிரபலங்களின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக அமைத்து காட்சிக்கு வைத்துவருகிறது. இதில் பாகுபலி படத்தில் நடித்த சத்யராஜின் உருவம் அந்தக் கதாபாத்திரத்தின் ஒப்பனைகளோடு அமையவுள்ளது. இக்கண்காட்சியில் தமிழரின் சிலை இடம்பெறுவது இது முதல் முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக